ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

பத்திரிகையாளரை குரங்கு என சொன்ன விவகாரம்: மன்னிப்பு கேட்க முடியாது - அண்ணாமலை திட்டவட்டம்!

பத்திரிகையாளரை குரங்கு என சொன்ன விவகாரம்: மன்னிப்பு கேட்க முடியாது - அண்ணாமலை திட்டவட்டம்!

அண்ணாமலை

அண்ணாமலை

குரங்கு என்பது வேறு குரங்கு மாதிரி என்பது வேறு, உவமையாகதான் சொல்லப்பட்டது எனவும் இதற்காக மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது எனவும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பத்திரிகையாளர்களை  குரங்கு என்று பேசியதற்காக கோவையில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையுடன் பத்திரிகையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சமீப காலமாக பத்திரிக்கையாளர்களிடம் அண்ணாமலை நடந்து கொள்ளும் விதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விளக்கம் அளித்த அவர், ‘நான்  குரங்கு மாதிரி என்றுதான் சொன்னேன் எனவும்  குரங்கு என்று சொல்லவில்லை எனவும் தெரிவித்தார்.

குரங்கு என சொன்னதற்கு மன்னிப்பு கேட்பீர்களா என்ற கேள்விக்கு, தவறு செய்யாதபோது நான் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் ? மன்னிப்பு கேட்பது என் ரத்தத்திலேயே கிடையாது எனவும் தெரிவித்தார்

' isDesktop="true" id="828207" youtubeid="z5G-jE4r5fE" category="coimbatore">

செய்தியை கவர் செய்வதும் செய்யாமல் போதும் உங்கள் விருப்பம் எனவும் தெரிவித்தார். ஏன் அழைப்பு விடுக்கின்றீர்கள் என்ற கேள்விக்கு, நான் அழைப்பதில்லையே என்றும் தெரிவித்தார். அண்ணாமலை தவறு செய்து விட்டதாக நினைத்தால் என் செய்தியை  தவிர்ப்பதற்கான உரிமை உண்டு எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.

இதையும் படிங்க : ’இது சிலிண்டர் விபத்தா?’ - ஆணிகள், பால்ரஸ் குண்டுகளை காண்பித்து அண்ணாமலை அடுக்கிய கேள்விகள்!

மேலும் பத்திரிகையாளர்களை  பார்த்து ஆயிரம், இரண்டாயிரம், மூன்றாயிரம் என சொன்னது குறித்தும் அவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அப்படி பணம் வாங்கும்  பத்திரிகையாளரை அம்பலப்படுத்தவேன். அப்படி  சொன்னதற்கான காரணத்தை வெளிப்படுத்துவேன் என தெரிவித்தார். அதை செய்வதில் யாருக்கும் பிரச்சினை இல்லை, பணம் வாங்கியவர்களை அம்பலப்படுத்த வேண்டயதுதானே? எல்லோரையும் ஏன் ஒன்றாக பேசுகின்றீர்கள் என அண்ணாமலையிடம் பத்திரிகையாளர்கள் வாக்குவாத்ததில் ஈடுபட்டனர். அப்போது அண்ணாமலையிடம் கேள்வி கேட்டதற்கு பா.ஜ.கவினர் எதிர்ப்பு தெரிவித்து பத்திரிகையாளர்களை திட்டினர். இது குறித்தும் அண்ணாமலையிடம் முறையிடபட்டது . ஆனால் இவற்றை கண்டு கொள்ளாமல் அண்ணாமலை கடந்து சென்றார்.

Published by:Lakshmanan G
First published:

Tags: Annamalai, BJP