ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி.. அமைச்சர் செந்தில் பாலாஜி காட்டம்!

அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி.. அமைச்சர் செந்தில் பாலாஜி காட்டம்!

மாதிரி படம்

மாதிரி படம்

டெல்லியில் இருக்கும் வானதி சீனிவாசன் எத்தனை நாட்கள் தொகுதியில் இருக்கிறார் என கேள்வி எழுப்பியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Coimbatore | Coimbatore | Tamil Nadu

  பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி என அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.

  கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் சாலைகள் சீரமைப்பு பணிகளை  மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர், கட்சி தலைமைக்கு தெரியாமல் பாஜக மாவட்ட நிர்வாகிகள் எப்படி பந்த் அறிவிக்க முடியும். கட்சியை சரியாக வழிநடத்தும் தலைவர் என்றால் ஏன் ஒப்புதல் இல்லாமல் பந்த் அறிவித்தீர்கள் என கேட்டிருக்க வேண்டும். நீதிமன்றத்தில் தனக்கு தொடர்பில்லை என்பது முறையானது அல்ல. அக்கட்சியினருக்குள் ஒரு முடிவுக்கு வர வேண்டும். பாஜக மாநிலத் தலைவர் ஒரு அரசியல் கோமாளி. அரசியல் கோமாளி தொடர்பான கேள்விகளை என்னிடம் கேட்க வேண்டாம் என கோபமாக தெரிவித்தார்.

  என் மீதான தனிப்பட்ட தாக்குதல்கள், என்னை இன்னும் மேம்படுத்துவதாக எடுத்துக் கொள்கிறேன். ஆளுநர் கல்லூரி நிகழ்ச்சியில் அரசியல் பேசுவது ஏற்புடையது அல்ல. ஆளுநருக்கு எல்லா அதிகாரமும் உள்ளது. கோவை கார் வெடிப்பு தொடர்பாக டிஜிபி, தலைமை செயலாளரை அழைத்து பேசி, அவரே என்.ஐ.ஏ. விசாரணைக்கு பரிந்துரை செய்திருக்கலாம். 4 நாட்களுக்கு பிறகு அரசியல் பேச வேண்டும் என ஆளுநர் பேசியுள்ளார்.

  Also Read:  ’போலீஸ் உயர்அதிகாரிகள் திமுகவினரை போல் செயல்படுகிறார்கள்’- காவல்துறை குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை பதில்!

  கோவை காவல்துறை இவ்வழக்கை மிகத் திறமையாக  கையாண்டுள்ளது. மாதக்கணக்கில் டெல்லியில் இருக்கும் வானதி சீனிவாசன் எத்தனை நாட்கள் தொகுதியில் இருக்கிறார்? அவரது தொகுதியில் நடக்கும் நிகழ்ச்சிக்கே வானதி வரவில்லை. பாஜகவினர் அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனையை முடித்துவிட்டு வரட்டும் என தெரிவித்தார்.

  கார் வெடிப்பு சம்பவம் நடந்த பின்னர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் மிக விரைவாக நடவடிக்கை எடுத்ததாக தொழில் முனைவோர் முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்தனர். பாஜகவினர் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பது எடுபடாது”என்றார்.

  செய்தியாளர்- ஜெரால்ட், கோவை.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Annamalai, Coimbatore, Senthil Balaji