Home /News /coimbatore /

மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்.. தொண்டர்கள் கைகளில் இருந்த பதாகைகளில் ஓபிஎஸ் படம்!!

மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்.. தொண்டர்கள் கைகளில் இருந்த பதாகைகளில் ஓபிஎஸ் படம்!!

மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்.. தொண்டர்கள் கைகளில் இருந்த பதாகைகளில் ஓபிஎஸ் படம்!!

மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்.. தொண்டர்கள் கைகளில் இருந்த பதாகைகளில் ஓபிஎஸ் படம்!!

மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்ட பிரச்சனைகளை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மேட்டுப்பாளையத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டம் – பங்கேற்ற தொண்டர்களின் கைகளில் இருந்த பதாதைகளில் தென்பட்ட ஓபிஎஸ் படம்.

    கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்ட பிரச்சனைகளை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை வடக்கு மாவட்ட செயலாளர் அருண்குமார் எம்.ல்.ஏ தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் சபாநாயகருமான தனபால், மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

    எடப்பாடி பழனிசாமி கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின் அதிமுக சார்பில் நடைபெறும் முதல் ஆர்ப்பாட்டம் என்பதால் ஏராளமான அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று மின்கட்டணம் மற்றும் சொத்துவரி உயர்வை கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய பாதாதைகளை கைகளில் பிடித்திருந்தனர்.



    இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தொண்டர்கள் கைகளில் இருந்த பதாகைகளில் ஆங்காங்கே ஈபிஸ் உடன் ஓபிஸ் படம் பொறிக்கப்பட்ட பாதைகளும் தென்பட்டன.

    இதுதொடர்பாக அதிமுக நிர்வாகிகள் கூறும்போது, ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த தொண்டர்கள் சிலர் பழைய அதிமுக பதாகைகளை கொண்டு வந்திருந்ததாலும் ஓபிஸ் படம் பொறிக்கபட்டிருந்த இடத்தில் அவரை மறைக்கும் வகையில் ஒட்டப்பட்டிருந்த காகிதம் கிழிந்து விட்டதாலும் இந்த குழப்பம் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: ADMK, O Panneerselvam, OPS, OPS - EPS

    அடுத்த செய்தி