ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

கட்டட வரைபட அனுமதிக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் : கையும் களவுமாக பிடிபட்ட பஞ்சாயத்து தலைவி!

கட்டட வரைபட அனுமதிக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் : கையும் களவுமாக பிடிபட்ட பஞ்சாயத்து தலைவி!

மாதிரி படம்

மாதிரி படம்

கார்த்திக் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். அவர்கள் ஆலோசனைப்படி ரூ.15 ஆயிரத்தை கார்த்திக் கொடுத்தார். அதனை ராஜன் வாங்கிய போது அங்கு மறைந்திருந்த போலீசார், அவரையும், சாவித்திரியையும் கைது செய்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Coimbatore, India

  கோவை மாவட்டம் ஜிஎன் மில்ஸ் சுப்பிரமணியம்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி பூர்ணிமா பெயரில், பெரியநாயகன்பாளையம், ஊராட்சி ஒன்றியம் பிளிச்சி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கோட்டை பிரிவு வேலன் நகரில் இரண்டு வீட்டு மனைகளுக்கு கட்டட வரைபட அனுமதி கேட்டு பஞ்சாயத்து அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

  இதற்காக அரசுக்கு செலுத்த வேண்டிய பணமும் செலுத்தியுள்ளார். இதற்கு அனுமதி கொடுக்க பஞ்சாயத்து தலைவர் சாவித்திரியை அணுகிய போது, அவரும், கணவர் ராஜனும் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு நிர்பந்தம் செய்தனர். தொடர்ந்து அணுகியபோது, பணம் கொடுக்காமல் அனுமதி தர முடியாது என கூறியுள்ளனர்.

  Also Read : சென்னையில் எப்படிப்பட்ட மழை வந்தாலும் சமாளித்துவிடலாம் - ஸ்டாலின்

  லஞ்சம் கொடுக்க விரும்பாத கார்த்திக் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். அவர்கள் ஆலோசனைப்படி ரூ.15 ஆயிரத்தை கார்த்திக் கொடுத்தார். அதனை ராஜன் வாங்கிய போது அங்கு மறைந்திருந்த போலீசார், அவரையும், சாவித்திரியையும் கைது செய்தனர்.

  கைது செய்யப்பட்ட ஊராட்சி தலைவர் சாவித்திரி அப்பகுதி அதிமுக மகளிர் அணி தலைவராகவும், இவரது கணவர் அதிமுக கிளை செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: ADMK, Bribe, Coimbatore, Panchayat