ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

அன்னூரில் தொழிற்பேட்டை அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படாது: தமிழ்நாடு அரசு

அன்னூரில் தொழிற்பேட்டை அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படாது: தமிழ்நாடு அரசு

காட்சிப் படம்

காட்சிப் படம்

கோவை மாவட்டம், அன்னூரில் தொழிற்பேட்டை அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் வட்டங்களில் டிட்கோ அமைப்பின் மூலம் தொழிற்பேட்டை அமைக்கும் தமிழ்நாடு அரசின் முடிவை கைவிட வலியுறுத்தி, விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், நிலத்தை கையகப்படுத்த மாட்டோம் என அரசு தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இருந்தும் வாக்குறுதியோடு நின்று விடாமல், விரைவாக அரசாணை வெளியிட வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழிற்பேட்டை அமைக்க, விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.மாறாக, தனியாருக்கு சொந்தமாக உள்ள 1630 ஏக்கர் தரிசு நிலங்கள் மட்டுமே தொழிற்பூங்கா அமைக்க கையகப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இறுதி மூச்சு வரை ஸ்டாலின் தான் முதல்வர்.. நாக்கை நீட்டி வாக்கு சொன்ன அமைச்சரால் சிரிப்பலை

எனினும், எந்தவித கட்டாயமும் இன்றி, தாமாக முன்வந்து நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு திருப்திகரமான இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கையகப்படுத்தப்படும் தரிசு நிலங்களில் காற்று மற்றும் நிலத்தடி நீரை மாசுபடுத்தாத தொழிற்சாலைகள் மட்டுமே அமைக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு உறுதியளித்துள்ளது.

First published:

Tags: Coimbatore