Home /News /coimbatore /

திமுக என்றாலே கமிஷன், கலக்சன், கரப்ஷன் தான்..எடப்பாடி பழனிசாமி பேச்சு!

திமுக என்றாலே கமிஷன், கலக்சன், கரப்ஷன் தான்..எடப்பாடி பழனிசாமி பேச்சு!

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

கொரோனாவிற்கு பிறகு மக்கள் வாழ்வதற்கே சிரமப்படும் சூழலில் மின்கட்டணத்தை உயர்த்தினால் பொதுமக்கள் எப்படி தாக்கு பிடிக்க முடியும் - எடப்பாடி பழனிசாமி

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Coimbatore | Tiruppur
    தமிழக முதல்வர் ஸ்டாலின் மக்களை பற்றி கவலைப்படாமல் தனது குடும்பத்தை பற்றி மட்டுமே எண்ணுவதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.  

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு அவிநாசி தேசிய நெடுஞ்சாலையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய அவர்,  இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு உங்கள் பகுதிக்கு முதன்முறையாக வந்துள்ளேன். எவ்வளவோ தடைகளை தாண்டி அதிமுக தொண்டர்கள் ஆதரவோடு அதிமுக பொதுச்செயலாளராக விவசாயியான நான் பொறுப்பேற்றது, விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி.

    ஜெயலலிதா மறைந்தாலும் அவரிடம்  வைக்கப்பட்ட கோரிக்கையை நிறைவேற்ற ரூ. 1652 கோடி மதிப்பில் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நானே வந்து அடிக்கல் நாட்டினேன்.

    விடியா திமுக அரசின் நிர்வாக குளறுபடி காரணமாக இத்திட்டம் முழுமை அடையாமல் கிடப்பில் உள்ளது. அதனால் பவானியில் ஏராளமான குடிநீர் வீணாகியது. அடுத்த ஆண்டு டிசம்பர் வந்தாலும் இத்திட்டத்தை நிறைவேற்ற மாட்டார்கள். ஒரு லோடு சவுடு மண் எடுக்க 1000 ரூபாய் லஞ்சம் வாங்குகிறார்கள். ஸ்டாலின் முதல்வர் ஆன பிறகு எதையெதையோ எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. 525 அறிவிப்புகள் கொடுத்தார். கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றி விட்டார்கள்.

    ALSO READ | மின் கட்டண உயர்வுதான் திராவிட மாடல் போலும்... ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம்

    முதியவர்களுக்கு கொடுக்கும் உதவி தொகையை நிறுத்தி விட்டனர். இந்தியாவில் 25 மாநிலங்களில் மத்திய அரசு டீசல் விலையை குறைத்தது. ஆனால் தமிழக அரசு விலையை குறைக்கவில்லை. அதிமுக கொண்டுவந்த திட்டங்களை தான் திறந்து வைக்கிறார்கள்.

    விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கினோம் இன்று எப்போது மின்சாரம் வரும் என்று தெரியவில்லை. இன்று மின்கட்டணத்தை உயர்த்தி 15 ஆயிரம் கோடி லாபம் அடைகிறார்கள். ஆனால் பற்றாக்குறை 12,500 கோடி தான். இனி வருடம் தோறூம் 6 சதவீதம் உயர்த்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளனர். கொரோனாவிற்கு பிறகு மக்கள் வாழ்வதற்கே சிரமப்படும் சூழலில் மின்கட்டணத்தை உயர்த்தினால் பொதுமக்கள் எப்படி தாக்கு பிடிக்க முடியும். சொத்து வரி 100 முதல் 150 சதவீதம் உயர்த்தி உள்ளனர். வருமானம் இல்லாத சூழலில் மக்களை கருத்தில்  கொள்ளாமல் வீட்டு மக்களை தான் நினைக்கிறார். திமுக ஆட்சியில்  எதிலும் கலக்சன், கமிஷன், கரப்ஷன் என தெரிவித்தார்.
    Published by:Anupriyam K
    First published:

    Tags: ADMK, Cm edapadi palanisami, Coimbatore, EPS, Tamilnadu

    அடுத்த செய்தி