ஹோம் /நியூஸ் /Coimbatore /

பொதுக்குழுவில் ஓபிஎஸ் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டனர்... இபிஎஸ் தான் காரணம் - புகழேந்தி

பொதுக்குழுவில் ஓபிஎஸ் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டனர்... இபிஎஸ் தான் காரணம் - புகழேந்தி

புகழேந்தி

புகழேந்தி

வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டனர் என அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கோவையில் அதிமுக  முன்னாள் செய்தி தொடர்பாளரும்  ஒ.பன்னீர் செல்வத்தின்  ஆதரவாளருமான புகழேந்தி செய்தியாளர்களை  சந்தித்தார். அப்போது 23 பொதுக்குழு தீர்மானங்களில் எந்த வித திருத்தமும் , வேறு எந்த தீர்மானமும் கொண்டு வரக்கூடாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என தெரிவித்தார்.23 தீர்மானமும் நிரகரிக்கபடுகின்றது என்றால், அதிமுக நிர்வாகிகள் 10 நாட்களாக உட்கார்ந்து எதற்கு இவற்றை தேர்வு செய்தனர் என கேள்வி எழுப்பினார்.சி.வி.சண்முகத்திற்கு அதிமுகவில் இருப்பவர்கள் பயப்படுகின்றனர் எனக்கூறிய அவர்,டிசம்பர் 1 ம் தேதி செயற்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர், 5 வருடத்திற்கு யாராலும் மாற்ற முடியாது என தெரிவித்தார்.

அதிமுக பொதுக்குழுவில் ஒ.பி.எஸ்  காரை பஞ்சராக்கினர், பேப்பரால் , தண்ணீர் பாட்டிலால் தாக்கினர் எனக்கூறிய அவர், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக தொடர  வைத்தற்காக அவர் மீது தாக்குதல் நடத்தி இருக்கின்றனர் என்றும் கேள்வி எழுப்பினார்.பொதுக்குழு என்ற பெயரில் அக்கிரமம் நடத்தி இருக்கின்றனர் எனக்கூறிய அவர் ,பழனிச்சாமிக்குதான் அறிவில்லை,  வேலுமணிக்கும் அறிவல்லையா? என காட்டமாக விமர்சனம் செய்தார்.

டிசம்பர் 1 ம் தேதி செயற்குழுவால் தேர்வு செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்  அதிகாரத்தை பயன்படுத்திதான் சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினராகி இருக்கின்றனர் என்பதை மறந்து விட்டார்கள் என தெரிவித்த அவர், இந்த பொதுக்குழுவில்  அதிமுகவிற்குள் நடக்கும் பிரச்சினைக்கு திமுகவை  இழுத்து எஸ்.பி.வேலுமணி எதற்கு  பேசினார் என தெரியவில்லை எனவும் தெரிவித்தார். தமிழக காவல் துறை ஏமாந்து இருந்தால் ஒ.பி.எஸ், வைத்தியலிங்கம் ஆகியோர் தாக்கப்பட்டு இருப்பார்கள் எனத்தெரிவித்த அவர்,அதிமுகவில் எல்லாருடைய பதவியும் பறிபோக சி.வி .சண்முகம்தான் காரணம் எனவும் தெரிவித்தார்.

வேகமாக பரவும் கொரோனா.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுத்த எச்சரிக்கை!

ஒ.பி.எஸ் தரப்பு மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டனர் என்கூறிய அவர், தமிழக முதல்வர், போலீசார் இதில் கவனமாக இருத்தனர் எனவும் பழனிச்சாமியின் தூண்டுதலின் பேரில்தான் இந்த சம்பவங்கள் நடந்துள்ளது எனவும் குற்றம்சாட்டினார்.ஜூலை 11 ம் தேதி பொதுக்குழு கூட வாய்ப்பில்லை என தெரிவித்த அவர்,பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுபபடுத்த மதிப்பு கூட்டு வரிக்குள் கொண்டு வராத திமுக அரசை கண்டிக்கின்றோம் என்ற தீர்மானம் , பிரதமர்  நரேந்திரமோடியை பாராட்டி வாழ்த்து தெரிவித்த தீர்மானம் ஆகியவையும் இந்த கூட்டத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

டிசம்பர் 1 ம் தேதி செயற்குழுவில் முடிவு செய்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி செல்லாது என்றால் சி.வி.சண்முகம் மற்றும் தர்மர் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினரானதும் செல்லாது,  நான் நீதிமன்றம் செல்வேன் எனவும் தெரிவித்தார்.ஜெயலலிதா இருந்த போது என்றைக்காவது எடப்பாடி பழனிச்சாமியின் கருத்தை கேட்டு இருப்பாரா? எனக்கூறிய அவர், இந்த பொதுக்குழு விவகாரத்தால் ஒ.பி.எஸ் க்கு அனுதாப அலை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.2500 பொதுக்குழு உறுப்பினர்களும் சி.வி .சண்முகத்தால் பதவி போய்  பயந்து இருக்கின்றனர் எனவும்,சி.வி.சண்முகம் கொடுத்த ஸடேட்மென்ட்டை வைத்து நீதிமன்றத்திற்கு  செல்வதுதான் அடுத்த பணி எனவும் தெரிவித்தார்.

பொன்னையன், ஓ.எஸ்.மணியன் மாதிரி சீனியர்கள் யாராவது அதிமுகவில் பேச வேண்டும் ஆனால் எல்லாரும் சி.வி.சண்முகத்தை விட்டு விட்டு பின்னால் நிற்கின்றனர் எனவும் தெரிவித்தார்.சசிகலாவை அழைத்து பார்த்து விட்டோம், ஆனால் அவர் எதுவும் சொல்லாமல்  அமைதியாக இருக்கின்றார் என தெரிவித்த புகழேந்தி, ஒ.பி.எஸ். காலை பிடித்து மீண்டும் கட்சிக்குள் வந்த முனுசாமி புரூட்டஸ், எட்டப்பர்களை மிஞ்சிய துரோகி எனவும் எம்.பி பதவியை வீணாக்கியவர் என்றும்  தெரிவித்தார்.

First published:

Tags: ADMK, OPS - EPS