ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

கோவையில் பாஜக சார்பில் அறிவிக்கப்பட்ட பந்த் ஒத்திவைப்பு : சி.பி.ராதாகிருஷ்ணன் தகவல்

கோவையில் பாஜக சார்பில் அறிவிக்கப்பட்ட பந்த் ஒத்திவைப்பு : சி.பி.ராதாகிருஷ்ணன் தகவல்

கோவை பந்த்

கோவை பந்த்

பாஜக சார்பில் நடத்த இருந்த பந்த் ஒத்திவைக்கப்படுவதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கோவையில் அறிவிக்கப்பட்ட பந்தை கட்சித் தலைமை அங்கீகரிக்கவில்லை என மாநில தலைவர் அண்ணாமலை நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்த நிலையில், பாஜக சார்பில் கோவையில் நடத்த இருந்த பந்த் ஒத்திவைக்கப்படுவதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

  சிலிண்டர் வெடிவிபத்து சம்பவம் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கார் விபத்தில் உயிரிழந்த ஜமேஷ் முபின் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு பொருட்கள் இந்த வழக்கில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து சம்பவம் குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது.

  இதனிடையே, இந்த சம்பவத்தை கண்டித்து கோவையில் வரும் 31 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர்  சி.பி.ராதாகிருஷ்ணன் , வானதி ஸ்ரீனிவாசன் எம்.எல்.ஏ உள்ளிட்ட தமிழக பாஜகவின் மூத்த தலைவர்கள் சிலர் அறிவித்திருந்தனர்.

  இதைத்தொடர்ந்து, தமிழக அரசை கண்டித்து பாஜக அறிவித்துள்ள பந்த்திற்கு தடைவிதிக்கக்கோரி கோவை தொழிலதிபர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, 'கோவையில் பந்த் நடத்த பாஜக மாநில தலைமை அழைப்பு விடுக்கவில்லை எனவும், கட்சி நிர்வாகிகள் சிலரது இந்த அறிவிப்பை தலைமை அங்கீகரிக்கவில்லை' என்றும் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தரப்பில் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வாதங்களை கேட்டறிந்த நீதிமன்றம், கோவையில் பாஜக பந்த் நடத்தினால் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவிட்டது.

  கோவை கார் வெடிப்பு சம்பவம்: உளவுத்துறையின் எச்சரிக்கை கடிதம் இருப்பதாக அண்ணாமலை பேச்சு

  இந்நிலையில், பந்த் நடத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், கோவை மாவட்டத்தில் பாஜக சார்பில் நடத்த இருந்த பந்த் ஒத்திவைக்கப்படுவதாக் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி பி ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து கோவை மாநகரில் பந்த் நடைபெறாது என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

  Published by:Lakshmanan G
  First published:

  Tags: BJP, Coimbatore, CP Radhakrishnan, Vanathi srinivasan