Home /News /coimbatore /

வாயில்லா ஜீவன்களான மாடுகள் மீது ஆசிட் வீசிய கொடூர நபர்கள்..

வாயில்லா ஜீவன்களான மாடுகள் மீது ஆசிட் வீசிய கொடூர நபர்கள்..

மாடுகளின் மீது ஆசிட் வீச்சு

மாடுகளின் மீது ஆசிட் வீச்சு

ஆசிட் வீச்சால் மாடுகள் முகம் மற்றும் உடலின் மேல் பகுதி கருகிய நிலையில் கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Coimbatore
    மேட்டுப்பாளையம்  கல்லார் அருகே மேய்ச்சலுக்கு சென்ற 4 பசு மாடு உட்பட 40 எருமை மாடுகளின் மீது ஆசிட் மர்மநபர்கள் ஆசிட் வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் உதகை சாலை ரயில்வே கேட் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ராஜ்குமார் வயது 39 . இவர் 10 ஏக்கர் விவசாய விளைநிலத்தை குத்தகைக்கு எடுத்தும் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் விவசாய விளை நிலத்தில் பாக்கு மற்றும் வாழைகளை பயிரிட்டும் விவசாயம் செய்து வருகிறார். மேலும் ஆடு, பசு மற்றும் எருமை மாடு என கால்நடைகளை வளர்த்து பராமரித்து வருகிறார்.

    தினசரி காலை 8 மணிக்கு கால்நடைகளை மேய்ச்சலுக்காக அருகே உள்ள வயலுக்கு அழைத்துச் சென்று விட்டு மாலை நேரத்தில் கால்நடைகளை திரும்பவும் ஓட்டி வந்து வீட்டில் கட்டி விட்டு சென்று விடுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கால்நடைகளின் முகம் மற்றும் உடலின் மேல் பகுதியில் ஆசிட்டை ஊற்றியுள்ளனர்.

    காயத்தால் அவதியுறும் மாடுகள்


    இந்த சம்பவம் குறித்து ராஜ்குமாருக்கு உடனடியாக தெரியவில்லை. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பசு , எருமை மாடுகளின் உடலில் திடீரென மாற்றங்கள் தெரியவந்தது. ஆசிட் வீச்சால் பசு எருமை மாடுகளின் முகம் மற்றும் உடலின் இரண்டு புறமும்  மேல் பகுதியில்  தோல் வெந்து உரிந்து கருகி காணப்பட்டது. இதனைக் கண்டதும் விவசாயி ராஜ்குமார் அதிர்ச்சி  அடைந்தார். ஆசிட் வீசியதால் எரிச்சலால் அவதிப்பட்டு வந்த 4 பசு மாடு, 40 எருமை மாடுகளின் நிலை கண்டு அழுதுள்ளார்.

    காயத்தால் அவதியுறும் மாடுகள்


    ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட வாயில்லா ஜீவன்களான கால்நடைகள் தாங்கள் படும் வேதனைகளை வெளியே சொல்ல முடியாமலும் எரிச்சலை தாங்க முடியாமலும்  கடந்த சில நாட்களாகவே வலியில் தவித்து வந்துள்ளன. இதுகுறித்து விவசாயி ராஜ்குமார் மேட்டுப்பாளையம் காவல்துறை, வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர் அலுவலருக்கு தகவல் தெரியப்படுத்தினார்.

    வலியில் அவதியுறும் மாடுகள்


    கால்நடை மருத்துவ குழுவினரும் ஆசிட்டால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். முன் விரோதம் காரணமாக யாரேனும் இந்த கொடூர செயலில் ஈடுபட்டார்களா இதன் பின்னணி என்ன என்பது போலீசாரின் விசாரணைக்கு பின்னரே தெரியவரும். கல்லார் பகுதியில் கால்நடைகளின் மீது ஆசிட் வீசிய கொடூர சம்பவம் அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

    செய்தியாளர் : எஸ்.யோகேஸ்வரன்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Coimbatore

    அடுத்த செய்தி