Home /News /coimbatore /

ஆவினில் காலி பணியிடங்கள்.. டின்பிஎஸ்சி மூலம் விரைவில் ஆட்கள் தேர்வு: அமைச்சர் நாசர்

ஆவினில் காலி பணியிடங்கள்.. டின்பிஎஸ்சி மூலம் விரைவில் ஆட்கள் தேர்வு: அமைச்சர் நாசர்

பால்வளத் துறை அமைச்சர் நாசர்

பால்வளத் துறை அமைச்சர் நாசர்

ஆவினில் யார் தவறுகள் செய்தாலும் அவர்கள் மீது  கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்த அமைச்சர் , ஆவின் பாலகங்களில்  ஆவின் பொருட்கள் தவிர மற்ற பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

ஆவினில் காலிபணியிடங்களை நிரப்பும் பணியை முறைப்படுத்தி, கடந்த கால தவறுகள் மீண்டும் நடக்காத வகையில்  டி.என்.பி.எஸ்.சி மூலம்  ஆட்கள் விரைவில் தேர்வு  செய்யப்படுவார்கள் என பால்வளத்துறை அமைச்சர் நாசர்  தெரிவித்தார்.

கோவை ஆர்.எஸ் புரத்தில் புதிதாக ஒரு கோடி  ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள  உயர் தொழில் நுட்ப ஆவின் பாலகத்தை பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று திறந்து வைத்தார். பின்னர்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் நாசர், கடந்த 10 ஆண்டுகளில் மூழ்கி போயிருந்த ஆவினை , நீர் மூழ்கி கப்பலின் மாலுமியை போல முதல்வர் மீட்டெடுத்துள்ளார் எனவும், உற்பத்தி,விற்பனையை அதிகரிக்க தமிழகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

கடந்த ஆட்சியில் முறைகேடான  முறையில் ஆவினில் விதிகளை மீறி  வேலை வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் ,அவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும் மீண்டும் காலிபணியடங்களை நிரப்பும் பணிகளை முறைப்படுத்தி, கடந்த கால தவறுகள் மீண்டும் நடக்காத வகையில்  டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.

ஒட்டுமொத்தமாக கூட்டுறவு துறை கலைக்கப்பட்டு கவர்னரின் கையெழுத்துக்காக காத்திருக்கின்றோம் எனவும் அவர் கையெழுத்து போட்ட பின்னர் ஆவின் சேர்மேன் பணி நியமனம் இருக்கும் எனவும் தெரிவித்தார். ஆவினில் யார் தவறுகள் செய்தாலும் அவர்கள் மீது  கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்த அமைச்சர் , ஆவின் பாலகங்களில்  ஆவின் பொருட்கள் தவிர மற்ற பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.
இதையும் படிங்க: தேச நலனுக்கு எதிரான அக்னிபத் திட்டத்தை உடனே கைவிட வேண்டும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
தொடர்ந்து பேசிய அவர், ‘பா.ஜ.க அண்ணாமலை தொடர்பான கேள்விக்கெல்லாம் பதில் சொல்லவே கூடாது, எங்களுக்கு சமமானவராக இருந்தால் பதில் சொல்லலாம் , ஆனால்  நோட்டாவுடன் போட்டியிட கூடியவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை’ என்று தெரிவித்தார். மேலும், தவறான கருத்துகளை , தன்னை முன்னிலைபடுத்துவதற்காக தினமும் நடிகர் வடிவேலை போல அண்ணாமலை பேசி வருகின்றார் என தெரிவித்தார்.

ஆவினில் ஹெல்த் மிக்ஸ் தயாரிப்பதற்கான ஏற்பாடுகள்தான் நடைபெற்று வருகிறது எனவும் , இனி அதை தயாரித்து, ஆய்வு செய்து, அனுமதி பெறவேண்டும் என தெரிவித்த அவர், ஆவினில் தயாரிக்காத பொருளை வெளியில் இருந்து  77 கோடிக்கு வாங்கி விட்டதாக  அபாண்டமான  பொய்யை  பா.ஜ.க தலைவர்  அண்ணமலை சொல்கிறார்.  எந்த அரிச்சுவடியும் தெரியாமல் அண்ணாமலை எப்படி ஐ.பி.எஸ் படித்தார் என ஐயம் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளை விட தற்போது பால்உற்பத்தி, விற்பனை போன்றவை அதிகரித்துள்ளது எனவும் அவர் கூறினார்.
Published by:Murugesh M
First published:

Tags: Aavin, Job Vacancy

அடுத்த செய்தி