Home /News /coimbatore /

கோவையில் பாம்புகளை பிடிக்க ஹெல்ப் லைன் அமைத்து மக்களை காக்கும் தன்னார்வலர்..

பாம்புகளை பாதுகாக்க பாம்பு பிடிக்கும் இடத்திலேயே சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் சஞ்சய், பொதுமக்களில் ஆர்வமுள்ள சிலருக்கு பாம்புகளை கையாளும் விதம் குறித்து பாதுகாப்பான பயிற்சியும் கொடுக்கிறார்.

பாம்பு என்றால் படையே நடுங்கும், ஆனால் அவற்றையே நடுங்க வைக்கிறார் கோவையை சேர்ந்த இளைஞர் சஞ்சய். இது வரை 15 ஆயிரம் பாம்புகளை பிடித்துள்ள அவர், நான்கு முறை பாம்பு கடி பட்டு உயிர்போகும் சூழல் ஏற்பட்டும் பொதுமக்களை பாதுகாத்து வருவதாக கூறுகிறார்.

இப்போது எல்லாம் வீட்டில் பாம்பு புகுந்தால் அடிக்க கம்பு தேடும் முன் கோவை மக்கள் சஞ்சய் என்பவரின் ஹெல்ப் லைனுக்கு தான் முதலில் அழைக்கின்றனர். பாம்புக்கு காயம் ஏற்படக் கூடாது, மனிதர்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஹெல்ப் லைன் அமைத்து சேவை செய்து வருகிறார் சஞ்சய்.

கோயில் கோபுரத்தில் வண்ணம் தீட்டும் பணி செய்து வரும் சஞ்சய், எந்த வேலையில் இருந்தாலும் பொதுமக்கள் அழைப்பு வந்தவுடன் உடனடியாக பாம்பு பிடிக்க செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இது வரை எட்டு முறை தன்னை பாம்பு கடித்துள்ளதாக கூறும் அவர், நான்கு முறை ஆபத்தான சூழ்நிலைக்கு சென்று இருப்பதாக தெரிவித்தார். ஒருமுறை இருகூரில் குழந்தையின் தொட்டிலில் இருந்த நாகப்பாம்பை எடுக்கும் பொழுது பெரும் சிரமமாக இருந்ததாகவும், தான் கடி வாங்கி குழந்தையின் உயிரை பாதுகாத்ததாகவும் கூறுகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாம்புகளை பாதுகாக்க பாம்பு பிடிக்கும் இடத்திலேயே சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் சஞ்சய், பொதுமக்களில் ஆர்வமுள்ள சிலருக்கு பாம்புகளை கையாளும் விதம் குறித்து பாதுகாப்பான பயிற்சியும் கொடுக்கிறார்.

பாம்பு கடி பட்டால் முதலில் அந்த இடத்தில் துணி துவைக்கும் சோப்பை கொண்டு நன்கு கழுவ வேண்டும் என்றும் பயத்தை தவிர்த்து, உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்பதும் சஞ்சயின் அறிவுரை. வீடுகளில் சில செடிகளை வளர்த்தால் பாம்புகள் அண்டாது என்பது பொய்யான ஒன்று என்று கூறும் அவர் பாம்புகள் பயப்படும் அளவிற்கு எந்த செடியும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Published by:Esakki Raja
First published:

Tags: Coimbatore, Snake

அடுத்த செய்தி