Home /News /coimbatore /

கண்ணுக்குள் தேசியக்கொடி ஓவியம் - வியப்பை ஏற்படுத்தும் சமூக ஆர்வலர்!

கண்ணுக்குள் தேசியக்கொடி ஓவியம் - வியப்பை ஏற்படுத்தும் சமூக ஆர்வலர்!

கண்ணில் தேசியக்கொடி வரைந்து விழிப்புணர்வு

கண்ணில் தேசியக்கொடி வரைந்து விழிப்புணர்வு

Coimbatore district news : கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தேசப்பற்றை பறைசாற்றும் வகையில் கண்ணுக்குள் தேசிய கொடியை ஓவியமாக வரைந்து வைத்து வீடியோ வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
    நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, பொதுமக்கள் அனைவருக்கும் தேசியக்கொடி சென்று சேரும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

    வரும் 13ம் தேதி முதல் 15ஆம் தேதி வரை வீடுகள் தோறும் தேசியக்கொடியை ஏற்ற பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

    இந்நிலையில், கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தேசிய கொடியின் தியாகத்தை கொண்டு சேர்க்கும் வகையில் நூதனமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில், குனியமுத்தூரை சேர்ந்த யு.எம்.டி ராஜா தன் கண் விழிகளில் தேசியக்கொடியை வரைந்து வைத்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கண்ணுக்குள் தேசியக்கொடி


    இதற்காக இவர் முட்டை ஓட்டின் உள்பகுதியில் இருக்கும் வெள்ளை கருவின் மேல் உள்ள மிக மெல்லிய ஆடை போன்ற படலத்தை எடுத்து அதில் தேசியக் கொடியை வரைந்து அதனை கண் விழிப்பகுதியில் வைத்துள்ளார்.

    Must Read : நம்மாழ்வாரை பின்பற்றி பாஜக செயல்படும் - சேலத்தில் அண்ணாமலை பேச்சு

    மேலும், பொதுமக்களிடையே தேசிய கொடியின் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இதனை செய்ததாக தெரிவித்துள்ள அவர் கண்ணுக்குள் தேசியக்கொடி இருப்பது போன்ற வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

    செய்தியாளர் - ஜெரால்ட்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Coimbatore, Eyes, Independence day, Painting

    அடுத்த செய்தி