Home /News /coimbatore /

தமிழக - கேரள எல்லையின் நடுவே நிற்கும் உடல்நலம் பாதித்த யானை... யார் சிகிச்சை அளிப்பது என இருமாநில வனத்துறையினர் குழப்பம்

தமிழக - கேரள எல்லையின் நடுவே நிற்கும் உடல்நலம் பாதித்த யானை... யார் சிகிச்சை அளிப்பது என இருமாநில வனத்துறையினர் குழப்பம்

தமிழக - கேரள எல்லையின் நடுவே நிற்கும் உடல்நலம் பாதித்த யானை

தமிழக - கேரள எல்லையின் நடுவே நிற்கும் உடல்நலம் பாதித்த யானை

கேரளா வனப்பகுதியில் ஆற்றின் கரையில்  கேரள வனத்துறையும், தமிழக வனப்பகுதியில் உள்ள ஆற்றங்கரையில்  தமிழக வனத்துறையினரும் யானையை கண்காணித்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
கோவையை அடுத்த தமிழக கேரளா எல்லைகளை பிரிக்கும் கொடுங்கரை ஆற்றில்  உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆற்றின் நடுவே நிற்கும் காட்டுயானைக்கு  யார் சிகிச்சை அளிப்பது என்ற குழப்பத்தில்  இரு மாநில வனத்துறையினரும் யானையை கண்காணித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம்  ஆனைகட்டி அருகே உள்ள பட்டிசாலை என்ற இடத்தில்  தமிழக கேரள மாநிலங்களை பிரிக்கும் கொடுங்கரை ஆறு அமைந்துள்ளது. இந்த ஆற்றின் நடுவே   8 வயது மதிக்கத்தக்க ஆண் யானை  உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சோர்வுடன் நின்று கொண்டிருக்கிறது. நேற்று மாலை முதல் இந்த யானை ஆற்றில் நின்று கொண்டு இருக்கும் நிலையில், இந்த யானைக்கு யார் சிகிச்சை அளிப்பது என்ற குழப்பத்தில்  இரு மாநில வனத்துறையினரும் காட்டு யானையை கண்காணித்து வருகின்றனர்.

Also Read : ‘எங்கடா அந்த மதுரவாயல்’ என தேடும் வட மாநிலத்தவர்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கேரளா வனப்பகுதியில் ஆற்றின் கரையில்  கேரள வனத்துறையும், தமிழக வனப்பகுதியில் உள்ள ஆற்றங்கரையில்  தமிழக வனத்துறையினரும் யானையை கண்காணித்து வருகின்றனர். உடனடியாக சோர்வுடன் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கும் காட்டு யானைக்கு இரு மாநில வனத்துறையினரும் இணைந்தோ அல்லது எதாவது ஒரு மாநில வனத்துறையோ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Published by:Vijay R
First published:

அடுத்த செய்தி