முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / பயணிகளுடன் குழிக்குள் சிக்கிய தனியார் பேருந்து.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்!

பயணிகளுடன் குழிக்குள் சிக்கிய தனியார் பேருந்து.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்!

குழிக்குள் சிக்கி கொண்ட பேருந்து

குழிக்குள் சிக்கி கொண்ட பேருந்து

Coimbatore | பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரையும் அருகில் இருந்தவர்கள் பத்திரமாக இறக்கி விட்டனர். தொடர்ந்து கிரேன் மூலம், பேருந்தை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore | Tamil Nadu

கோவை இடையர்பாளையம் அருகே குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழி சரியாக மூடப்படாததால், அந்த வழியாக சென்ற தனியார் பேருந்து அந்த குழிக்குள் சிக்கிக் கொண்டது. 

கோவை தடாகம் சாலையில் சிவாஜி காலனி முதல் கேஎன்ஜி புதூர் வரை குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக  தடாகம் சாலையில் குழிகள்  தோண்டப்பட்டு பல்வேறு இடங்களில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலையில் இடையர்பாளையம் அருகே கடந்த இரண்டு நாட்களுக்கு முன் குழி தோண்டப்பட்டு குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு இருந்தது. அந்த குழிகள் சரியாக மூடப்படாமல் இருந்த நிலையில், அது குறித்த அறிவிப்பு போர்டுகளும்  வைக்கப்படவில்லை.

Also Read : பரம்பிக்குளம் அணையின் 2வது மதகு உடைந்து தண்ணீர் வெளியேற்றம்

இந்நிலையில் அவ்வழியே வந்த தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக அந்த குழிக்குள் சிக்கி கொண்டது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சத்தில் அலற தொடங்கினர். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரையும் பத்திரமாக இறக்கி விட்டனர். தொடர்ந்து கிரேன் மூலம், பேருந்தை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Bus accident, Coimbatore