Home /News /coimbatore /

மதுவில் விஷம் கலந்து மாமனாரைக் கொன்ற மருமகன்..ஆன்லைனில் சயனைடு வாங்கியதாக திடுக்கிடும் வாக்குமூலம்..

மதுவில் விஷம் கலந்து மாமனாரைக் கொன்ற மருமகன்..ஆன்லைனில் சயனைடு வாங்கியதாக திடுக்கிடும் வாக்குமூலம்..

சத்தியராஜ்..

சத்தியராஜ்..

Pollachi | யூடியூப்பில் வீடியோக்கள் பார்த்து திட்டமிட்டு மாமனாரை கொலை செய்ததாக மருமகன் வாக்குமூலம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pollachi, India
பொள்ளாச்சி அருகே மதுவில் விஷம் கலந்து மாமனாரைக் கொன்ற வழக்கில், ஆன்லைனில் சயனைடு வாங்கி கொலை செய்ததாக மருமகன் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பொள்ளாச்சி பணப்பட்டி அருகே சூலூரைச்சேர்ந்தவர்கள் மனோகரன். வேலுச்சாமி. கூலி தொழிலாளியான இவர்கள் இருவரும் பணப்பட்டி அருகே மது அருந்திய போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இருவரும் குடித்தது போலி மதுவா? அல்லது கள்ளச்சாரயமா? என்ற கோணத்தில் நெகமம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். தீவிர விசாரணையில் மது குடித்து பலியானவர்களில் ஒருவரான மனோகரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தோட்டத்தின் ஒரு பகுதியை 40 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ததும், அதில் புதிதாக ஒரு ஆட்டோ வாங்கியதும் தெரியவந்தது.

Read More : தேனியில் பூங்கா அமை​க்க​​ தோண்டப்பட்ட பள்ள​த்தில் தவறி விழுந்து 8​ ​வயது சிறுமி​ உயிரிழப்பு...


இதனால் மனோகரன் குடும்பத்தார் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.மனோகரனின் மனைவி, மகள் மற்றும் மருமகன் சத்யராஜ் ஆகியோரிடம் நடத்திய தீவிர விசாரணையில் சத்தியராஜ் மட்டும் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார்.
அவரைப் பிடித்து தனியாக கிடிக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன

நிலத்தை விற்பனை செய்த பணத்தில் சிறிது பணத்தை தனக்குத் தருமாறு சத்தியராஜ் மாமனாரிடம் கேட்டு வந்துள்ளார்.பலமுறை வலியுறுத்தி கேட்டும் பணத்தைக் கொடுக்க முன்வராததால் ஆத்திரமடைந்த சத்தியராஜ் மாமனாரை கொலை செய்யத்திட்டமிட்டுள்ளார்.

போலீசில் மாட்டிக் கொள்ளாமல் கொலை செய்வது எப்படி என யோசித்த சத்யராஜ் யூடியூப்பில் வீடியோக்களைப் பார்த்துள்ளார்.விஷம் கொடுத்து கொலை செய்யலாம் என முடிவுக்கு வந்தவர், ஆன்லைனில் சயனைடு ஆர்டர் செய்து அதனை மதுவில் கலந்து மாமனாரிடம் கொடுத்துள்ளார்.

மனோகரனும் தனது நண்பர் வேலுச்சாமியுடன் சேர்ந்து சயனைடு கலந்த மதுவைக் குடித்து உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, ஆன்லைனில் சயனைடு எப்படி கிடைத்தது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர் ம.சக்திவேல்..பொள்ளாச்சி
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Coimbatore, Crime News, Pollachi

அடுத்த செய்தி