சுந்தர் சி இயக்கத்தில் வெளியான நகரம் படத்தில் வடிவேலு நூறாவது திருட்டில் போலீசாரிடம் வசமாக சிக்கும் காட்சியை பார்த்து, சிரிக்காதவர்களே இருக்க முடியாது. இதேபோல் 100வது திருட்டில் ஈடுபட்டு வசமாக சிக்கியிருக்கிறார் ஒருவர். கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த ஷபீர் அகமது நேற்று பேருந்தில் சென்று கொண்டிருந்தார்.
டவுன்ஹால் பிரகாசம் அருகே சென்ற போது, அவரது செல்போனை உடனிருந்த பயணி திருடிவிட்டு தப்ப முயன்றார். ஷபீர், தப்பியோட முயன்ற போது சக பயணிகளின் சுற்றிவளைத்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.
பிடிபட்டவரின் வரலாறை போலீசார் அலசி ஆராய, அவர் செல்வபுரத்தை சேர்ந்த போண்டா ஆறுமுகம் என்பதும், ஏற்கனவே அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. 8 வழக்குகளில் அவரை போலீசார் தேடி வருவதும் அம்பலமானது. சிறுவயதில், முதல் முறையாக போண்டாவை திருடிய காரணத்தால், அவரது பெயருக்கு முன்பாக போண்டா சேர்ந்து கொண்டது.
இதையும் படிங்க: ''உதயநிதிக்கு அமைச்சர் பதவி... சமூக அநீதி'' - வானதி சீனிவாசன் விமர்சனம்
இதற்கெல்லாமல் மேலாக, போண்டா ஆறுமுகம் ஈடுபட்ட 100வது திருட்டு இதுவாகும். 14 வயதில் இருந்து திருடத் தொடங்கிய, இந்த திருடர் குல திலகம், தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Theft