ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

கஞ்சா விற்ற பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறை... ரூ. 1 லட்சம் அபராதம் விதிப்பு..!

கஞ்சா விற்ற பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறை... ரூ. 1 லட்சம் அபராதம் விதிப்பு..!

கைது செய்யப்பட்ட பெண்

கைது செய்யப்பட்ட பெண்

அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்படும் என தீர்ப்பு.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore | Tamil Nadu

கோவையில் கஞ்சா விற்ற பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் கடந்த 2018 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி பீளமேடு போலீசார் ரோந்து சென்றபோது கொடிசியா சாலையில் உள்ள மண்டல அறிவியல் மையம் அருகே கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள் கோவை கவுண்டம்பாளையம் காந்திநகரை சேர்ந்த சொக்கநாதன், அவருடைய மனைவி சுகுணா (வயது 51) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த தம்பதியை கைது செய்து அவர்களிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா மற்றும் 3,600 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கு  போதைப்பொருட்கள் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருக்கும்போதே சொக்கநாதன் உயிரிழந்தார். சுகுணா மீது மட்டும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இதையும் படிங்க | கோவை கார் வெடிப்பு: 6வது நபர் கைதில் பரபரப்பு திருப்பம்!

இந்த விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட சுகுணாவுக்கு 10 ஆண்டு சிறை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி லோகேஸ்வரன் தீர்ப்பு வழங்கினார்.

அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்படும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சுகுணா கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Published by:Anupriyam K
First published:

Tags: Arrest, Cannabis, Coimbatore