ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

ஆடு திருடியதாக சண்டை! துப்பாக்கியால் சுட்டு ஒருவர் கொலை! கோவையில் பரபரப்பு!

ஆடு திருடியதாக சண்டை! துப்பாக்கியால் சுட்டு ஒருவர் கொலை! கோவையில் பரபரப்பு!

மாதிரி படம்

மாதிரி படம்

Coimbatore | ஆத்திரமடங்காத ரஞ்சித், அவரது வீட்டிலிருந்த நாட்டு துப்பாக்கியால் சின்னசாமியை முதுகிலேயே சுட்டு கொலை செய்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Coimbatore | Coimbatore | Tamil Nadu

  கோவையில் ஆடு காணாமல் போனதற்கு நீதான் காரணம் என கூறியதால் ஆத்திரத்தில் நாட்டு துப்பாக்கியால் சுட்டு கொன்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடையை சேர்ந்த சின்னசாமி, ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று இவரது 2 ஆடுகள் கிடையில் இருந்து வழிமாறி சென்றுள்ளது. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், சின்னசாமி மன வேதனையில் இருந்துள்ளார்.

  இதனால், நேற்று இரவு  சின்னசாமியும் (58), அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் (28) என்பவரும் ஒன்றாக மது அருந்தி உள்ளனர். போதையில் இருவரும் பேசி கொண்டிருந்த போது, திடீரென சின்னசாமி, தனது இரு ஆடுகள் காணாமல் போனதற்கு நீதான் காரணம் என ரஞ்சித் மீது பழி சுமத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித், சின்னசாமியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை கண்ட அய்யசாமி என்பவர் இருவரையும் சமரசம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

  ALSO READ | கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, கொலை..பிரபல ரவுடி ராக்கெட் ராஜா கைது...நெல்லை போலீசார் அதிரடி..

  ஆனால் ஆத்திரமடங்காத ரஞ்சித், அவரது வீட்டிலிருந்த நாட்டு துப்பாக்கியால் சின்னசாமியை முதுகிலேயே சுட்டு கொலை செய்தார். பின்னர், அவரது வீட்டிற்கு சென்று தூங்கியுள்ளார்.

  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சின்னசாமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் ரஞ்சித்தை கைது செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Coimbatore, Crime News, Kovai, Murder