ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

அதிரப்பள்ளி வனப்பகுதியில் தும்பிக்கை இல்லாமல் சுற்றித் திரியும் குட்டி யானை..!

அதிரப்பள்ளி வனப்பகுதியில் தும்பிக்கை இல்லாமல் சுற்றித் திரியும் குட்டி யானை..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Pollachi | அதிரப்பள்ளி வனப்பகுதியில் தும்பிக்கை இல்லாமல் சுற்றித் திரியும் குட்டி யானைக்கு தகுந்த சிகிச்சை அளிக்க அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pollachi, India

ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை அடுத்துள்ள தமிழக எல்லைப் பகுதியான கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள அதிரப்பள்ளி வனப்பகுதியில் உள்ளது. இங்கு புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டு மாடு மற்றும் யானை என அரிய வகை விலங்குகளும் பறவைகளும் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் அதிரப்பள்ளி வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலையில் யானை கூட்டம் ஒன்று இருப்பதைக் அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்..

அப்போது அந்தக் கூட்டத்தில் தாய் யானையுடன் இருந்த ஒரு குட்டி யானை தும்பிக்கை இல்லாமல் உணவு உட்கொள்ள முடியாமல் சிரமத்துக்குள்ளானதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  உடனே அப்பகுதி மக்கள் அதரப்பள்ளி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு யானை குட்டிக்கு சிகிச்சை மேற்கொள்ள கோரிக்கை வைத்தனர்.

பொதுமக்கள் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானை கூட்டத்திலிருந்து குட்டியை பார்த்த பொழுது தும்பிக்கை இல்லாமல் ஒரு குட்டி இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து மாவட்ட வன அலுவலர் லட்சுமி அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தும்பிக்கை இல்லாமல் இருக்கும் யானை குட்டியை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

யானை குட்டி மற்ற விலங்குகளின் தாக்குதலுக்கு உட்பட்டு தும்பிக்கையை இழந்து உள்ளதா அல்லது சாலை ஓரத்தில் சுற்றி திரியும் பொழுது வாகனத்தில் ஏதாவது விபத்து ஏற்பட்டு துதிக்கையை இழந்துள்ளதா என்று வனத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

மேலும் யானை குட்டி ஆரோக்கியமாக உள்ளதா என்பதை உறுதி செய்யும் வண்ணத்தில் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு யானைக்கு தும்பிக்கை இல்லை என்றால் தானாக தண்ணீர் மற்றும் உணவு உட்கொள்ள முடியாத சூழ்நிலை நிலை ஏற்பட்டுள்ளதால் வன ஆர்வலர்கள் இடையேயும் வனத்துறையினரிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: ம.சக்திவேல், பொள்ளாச்சி

First published:

Tags: Coimbatore, Elephant, Local News, Pollachi, Tamil News