முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / லாரி ஓட்டுநரின் அஜாக்கிரதையால் நடந்த விபரீதம்.. 4 வயது சிறுவன் உயிரிழப்பு

லாரி ஓட்டுநரின் அஜாக்கிரதையால் நடந்த விபரீதம்.. 4 வயது சிறுவன் உயிரிழப்பு

விபத்தை ஏற்படுத்திய தண்ணீர் லாரி

விபத்தை ஏற்படுத்திய தண்ணீர் லாரி

Mettupalayam | மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகையில் லாரி மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Mettupalayam, India

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள

சிறுமுகை நீலிபாளையம் நால்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் டிரைவராக பணிபுரிகிறார். இவரது மகன் ரித்திஷ் வயது 4. இந்நிலையில் நீலிபாளையம் நால்ரோடு பிரிவில் உள்ள முனியப்பன் கோவிலில் திருவிழா நடைபெற உள்ளதால் திருவிழாவுக்காக கோவிலை தூய்மைப்படுத்த தனியார் தண்ணீர் டேங்கர் லாரி வரவழைக்கப்பட்டது.

அந்த லாரி கோவிலை வந்தடைந்ததும் முன் பின் நகராமல் இருக்க டயர்களுக்கு கற்களை எதுவும் வைக்காமல் ஓட்டுநர் லாரியை நிறுத்திவிட்டு சென்றுவிட்டார். அப்போது ரோட்டோரத்தில் சிறுவர் சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். டேங்கர் லாரி தண்ணீர் மூலம் கோவிலில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் டேங்கர் லாரி திடீரென எதிர்பாராத விதமாக தானாகவே முன்னோக்கி சென்றது. அப்போது ரோட்டோரத்தில் விளையாடிக் கொண்டிருந்த  சிறுவன் ரித்தீஸ் மீது லாரி மோதியது. இதில் படுகாயம் அடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சிறுவனுடன் விளையாடிக் கொண்டிருந்த மற்ற சிறுவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமுகை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சிறுவனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி             வைத்தனர்.

Also see... கொடைக்கானல்:தூண்பாறையை மறைத்து கட்டப்பட்ட சுவரை இடிக்கும் பணி துவக்கம்

இதுகுறித்து சிறுமுகை போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர்: எஸ் யோகேஸ்வரன்,  மேட்டுப்பாளையம்

First published:

Tags: Child, Dead, Mettupalayam, Water lorry