ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

சைக்கிளில் சென்ற சிறுவனை அடித்து தூக்கிய கார்.. பதைபதைக்கும் காட்சி.. கோவையில் பயங்கரம்!

சைக்கிளில் சென்ற சிறுவனை அடித்து தூக்கிய கார்.. பதைபதைக்கும் காட்சி.. கோவையில் பயங்கரம்!

விபத்தில் சிக்கி பலியான சிறுவன்

விபத்தில் சிக்கி பலியான சிறுவன்

Coimbatore accident | தெருவில் விளையாடி கொண்டிருந்த சிறுவனுக்கு கண்ணிமைக்கு நேரத்தில் நேர்ந்த துயர சம்பவம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

கோவையில் சைக்கிளில் சென்ற சிறுவன் மீது கார் மோதிய பதைபதைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

கோவை போத்தனூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த பஷீத் என்பவரின் மகன் ரைஃபுதீன் (8) 3ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வீடு இருக்கும் தெருவில் கடந்த 22ஆம் தேதி சைக்கிள் ஓட்டி விளையாடி கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சையது முகமது என்பவர் காரை பார்க்கிங் செய்து கொண்டிருந்தார்.

அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென பாய்ந்தது சைக்கிள் ஓட்டி சென்ற சிறுவன் மீது மோதியது. இதில், சைக்கிளில் விளையாடி கொண்டிருந்த 8 வயது சிறுவன் உடல் நசுங்கி படுகாயமடைந்தார்.

' isDesktop="true" id="878497" youtubeid="E3JtPwFGHaw" category="coimbatore">

இதனை கண்ட அவரது பெற்றோர் சிறுவனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக  வெரைட்டிஹால் போக்குவரத்து புலனாய்வு பிரிவு  போலீசார் சையத் முகமது மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சைக்கிளில் சென்ற சிறுவன் மீது கார் மோதும் பதப்பதைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது  வெளியாகி உள்ளது.

First published:

Tags: Accident, Coimbatore, Death, Local News, Tamil News