ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

செங்கல் சூளையில் சுருண்டு கிடந்த 8 அடி மலை பாம்பு.. பதறி ஓடிய பணியாளர்கள்.. கோவையில் சம்பவம்!

செங்கல் சூளையில் சுருண்டு கிடந்த 8 அடி மலை பாம்பு.. பதறி ஓடிய பணியாளர்கள்.. கோவையில் சம்பவம்!

8 அடி மலை பாம்பு பத்திரமாக மீட்பு

8 அடி மலை பாம்பு பத்திரமாக மீட்பு

செங்கல் சூளையில் ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது, 8 அடி மலை பாம்பை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Coimbatore | Coimbatore | Tamil Nadu

  கோவையில் சுற்றி திரிந்த 8 அடி மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்.

  கோவை தொண்டாமுத்தூர் அடுத்த குப்பைபாளையம் பகுதியில் ரத்தினசாமி என்பவரின் செங்கல் சூளை இயங்கி வருகிறது.

  இதன் பின்புறம் இன்று காலை 10 மணி அளவில் சுமார் 8 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு இருப்பதை  கண்டு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அவர்கள் புளியம்பட்டி வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

  இதையும் படிங்க | கோவையில் எலி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம் - பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

  பூலாம்பட்டி வனச்சரகர் சுசீந்திரநாத் அறிவுத்தலின்படி வனக்காப்பாளர் ஐயாசாமி, வேட்டைதடுப்பு காவலர்கள், லிவீங்ஸ்டன், உதயவாணன், சூப்பர் மெம்மரி வாச்சர் கிருஷ்ணராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சுமார் 4 வயது மதிக்க தக்க 8 அடி மலைப்பாம்பை லாபகமாக பிடித்து குப்போபாளையம் வனப்பகுதியில் பத்திரமாக விடுவித்தனர்.

  செய்தியாளர்: சுரேஷ், தொண்டாமுத்தூர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Coimbatore, Snake