Home /News /coimbatore /

கோவையில் பள்ளி கோல் போஸ்ட் சரிந்து விழுந்ததில் 7 வயது சிறுமி படுகாயம் - 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவையில் பள்ளி கோல் போஸ்ட் சரிந்து விழுந்ததில் 7 வயது சிறுமி படுகாயம் - 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை பள்ளி

கோவை பள்ளி

Coimbatore : கோவை தனியார்பள்ளியில், கோல் போஸ்ட் சரிந்து விழுந்ததில் 7 வயது சிறுமி படுகாயம் அடைந்த நிலையில், 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவையில் தனியார் பள்ளி கோல் போஸ்ட் சரிந்து விழுந்ததில் 7 வயது சிறுமி படுகாயம் அடைந்து தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கோவை பீளமேடு பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளி வளாகத்தில் கடந்த 22 ஆம் தேதி 7 வயது சிறுமி  விளையாடிக் கொண்டிருந்த பொழுது மைதானத்தில் இருந்த கோல் போஸ்ட் சரிந்து விழுந்தது. இதில் சிறுமி  தலையில் பலத்த காயம் அடைந்து மூளையில் ரத்தகசிவு ஏற்பட்டு அவினாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிறுமி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பாக சிறுமியின் தந்தை  கொடுத்த புகாரின் பேரில் பள்ளியின் நிர்வாக இயக்குனர் சுவேதா கிருஷ்ணமூர்த்தி, முதல்வர் ரூடால்ப், ஆசிரியை அமரீஸ்வரி, விளையாட்டு ஆசிரியர்கள் சீனிவாசன்,பரத் ஆகிய 5 பேர் மீது பீளமேடு போலீசார்  வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Must Read : மாணவியை விடுதிக்கு அழைத்து பாலியல் தொல்லை...பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கைது

தனிநபருக்கு கொடுங்காயம் ஏற்படுத்துதல் மற்றும் சிறார் பாதுகாப்பு சட்டம் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமி படுகாயம் அடைந்த நிலையில்  தனியார் பள்ளி நிர்வாகி ,முதல்வர், ஆசிரியர்கள் என ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது சக ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Suresh V
First published:

Tags: Case, Coimbatore, Injured, School student

அடுத்த செய்தி