Home /News /coimbatore /

ஜார்கண்ட்டிலிருந்து விமானம் மூலம் கோவை வந்து திருட்டு- வழிப்பறியில் ஈடுபட்ட 7 பேரைக் கைது செய்த காவல்துறை

ஜார்கண்ட்டிலிருந்து விமானம் மூலம் கோவை வந்து திருட்டு- வழிப்பறியில் ஈடுபட்ட 7 பேரைக் கைது செய்த காவல்துறை

கைது செய்யப்பட்ட கொள்ளையர்களில் 3 பேர்

கைது செய்யப்பட்ட கொள்ளையர்களில் 3 பேர்

ஜார்கண்ட் , பீகார் ஆகிய மாநிலங்களில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் கொண்ட கும்பலை கோவை மாநகர காவல் துறையினர் பிடித்தனர். சிறுவர்கள் 3 பேரை காப்பத்திற்கு அனுப்பய போலீசார் 4 பேரை கைது  செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்கவும் ...
கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டு, செல்போன் பறிப்பு போன்ற வழிபறி சம்பவங்கள் அதிகமாக நடப்பதாக கிடைத்த புகாரை தொடர்ந்து மாநகர காவல் ஆணையர்  பாலகிருஷ்ணன் தனிப்படை அமைத்து திருட்டு கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுத்து இருந்தார். ஆர்.எஸ்.புரம் உதவி ஆணையர்  மணிகண்டன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர்   ஆர்.எஸ்.புரம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்ட போது பூ மார்க்கெட் பகுதியில் முதியவர் ஒருவரிடம் இருந்து பணத்தை பறிக்க முயன்றனர்.

அவர்களை தனிப்படையினர் பிடித்து ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பகதூர் மகடோ( 36),  சந்தோஷ் (33), பப்லு மகடோ (23) மற்றும் பீகாரை சேர்ந்த மனிஷ்மகோலி (22), பீகாரை சேர்ந்த 15 சிறுவன், ஜார்கண்ட்டை சேர்ந்த 14 மற்றும் 10 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் 7 பேரும் விமானத்தில் கோவை வந்து  அறை எடுத்து தங்கி டவுன்ஹால், உக்கடம், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் ஆகிய பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

பணம், செல்போன் மற்றும் நகைகளை திருடிய பின்னர்  கோவையிலிருந்து விமானம் மற்றும் ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருப்பதும் தெரியவந்தது. பணம் முழுவதும் செலவான பிறகு மீண்டும் சொந்த ஊரிலிருந்து கோவைக்கு விமானம் மூலம் திரும்பி திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதும் தெரிய வந்தது.

Also see... தமிழகத்தை இரண்டாகப் பிரித்து இரண்டிலும் முதல்வராவோம்: நயினார் நாகேந்திரன்

இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் வட மாநிலத்தை சேர்ந்த் 4 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களில் சிறுவர்கள் 3 பேர், டான் பாஸ்கோ அன்பு இல்ல காப்பகத்திற்கு அனுப்பபட்டனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Coimbatore, Crime News

அடுத்த செய்தி