ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

சென்னை - கோவை இடையே 6 சிறப்பு ரயில்கள் ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

சென்னை - கோவை இடையே 6 சிறப்பு ரயில்கள் ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

ரயில்கள் ரத்து

ரயில்கள் ரத்து

எந்தெந்த நாட்களில் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என்பது குறித்த முழு விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras] | Coimbatore

சென்னை-கோவை இடையே 6 ரயில்கள் பராமரிப்பு பணி காரணமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்கண்ட ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் - சேலம் (வ.எண்:22153) இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் நவம்பர் 30, டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

சேலம் - எழும்பூர் (22154) இடையே இரவு 9.30 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் டிசம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் - கோவை (12679) இடையே மதியம் 2.30 மணிக்கும், கோவை-எம்.ஜி.ஆர். சென்டிரல் (12680) இடையே காலை 6.15 மணிக்கும் இயக்கப்படும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரும் டிசம்பர் 3ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இதையும் படிங்க | மின்நுகர்வோர்களுக்கு ஆதார் எண் இணைப்பு.. கோவையில் 154 இடங்களில் சிறப்பு முகாம்...

சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் - கோவை (12675) இடையே காலை 6.10 மணிக்கும், கோவை - சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் (12676) இடையே மதியம் 3.15 மணிக்கும் இயக்கப்படும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரும் டிசம்பர் 3ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் - கோவை (12243) இடையே காலை 7.10 மணிக்கும், கோவை - சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் (12244) இடையே மதியம் 3.05 மணிக்கும் இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரும் டிசம்பர் 3ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

First published:

Tags: Chennai, Coimbatore, Local News, Train