ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

நகைக்கடை ஷட்டரை உடைத்து கொள்ளை.. மேட்டுப்பாளையத்தில் மர்ம நபர்கள் கைவரிசை

நகைக்கடை ஷட்டரை உடைத்து கொள்ளை.. மேட்டுப்பாளையத்தில் மர்ம நபர்கள் கைவரிசை

மாதிரி படம்

மாதிரி படம்

Coimbatore News : மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் நகை கடையில் ஷட்டர் பூட்டை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Coimbatore, India

  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை மாரியாபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்(51), இவர் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாந்தாமணி(43), இவர் காரமடை கார் நிறுத்தம் அருகில் வடக்கு ரத வீதியில் உள்ள நரேன் காம்ப்ளக்ஸில் சோலையனா ஜுவல்லரி என்ற விலாசத்தில் நகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

  இதற்கிடையில், கடந்த 17ம் தேதி இரவு சாந்தாமணி வழக்கம்போல் நகை கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று கோயிலுக்கு சென்றுவிட்டதால் நகைக்கடையை திறக்கவில்லை.

  இதையும் படிங்க : நகை கடனை தள்ளுபடி செய்யாமலேயே கையெழுத்து கேட்ட வங்கி ஊழியர்கள்.. விவசாயிகள் அதிர்ச்சி!

  இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் சாந்தாமணி நகைக்கடையை திறப்பதற்கு வந்தார். அப்போது கடையின் இரும்பு ஷட்டர் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தாமணி உள்ளே சென்று பார்த்தபோது நகைக்கடையில் வைத்திருந்த அரை கிலோ மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும்  6 கிலோ வெள்ளிப்பொருட்களை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

  மேலும் அங்கு பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவின் காட்சிகள் பதிவாக கூடிய ஹாட் டிஸ்க்ஸ் ஆகியவற்றையும் எடுத்து சென்று விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாதன் நாராயணன் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.

  இந்த கொள்ளையில் துப்பு துலக்க கோவையில் இருந்து போலீஸ் துப்பறியும் நாய் வீரா வரவழைக்கப்பட்டது. நகை கடையில் மோப்பம் பிடித்த நாய் காரமடை ரோடு வழியாக சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த கொள்ளையில் துப்பு துலக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

  தனிப்படை போலீசார் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் காரமடை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  செய்தியாளர் : யோகேஸ்வரன் - மேட்டுப்பாளையம்

  Published by:Karthi K
  First published:

  Tags: Coimbatore, Crime News