ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

சாலை நடுவில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்... கோவையில் 4 பேர் கைது

சாலை நடுவில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்... கோவையில் 4 பேர் கைது

கைது செய்யப்பட்ட 4 பேர்

கைது செய்யப்பட்ட 4 பேர்

Coimbatore | கோவையில் நடுரோட்டில் கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய குற்றப்பின்னணி கொண்ட 4 பேரை வெரைட்டிஹால் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை இடையர் வீதியில் உள்ள பேக்கரி ஒன்றின் அருகே கடந்த 25ம் தேதி இரவு சில வாலிபர்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் நடுரோட்டில் கத்தியால் கேக் வெட்டி பிறரை அச்சுறுத்தும் வகையில் பிறந்தநாள் கொண்டாடியதாக கூறப்படுகிறது. இதனை அவர்கள் வீடியோ பதிவு செய்து, அதனை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டனர்.

இது தற்போது வைரலான நிலையில்  இது குறித்து வெறைட்டிஹால் காவல் நிலைய  சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பொது இடத்தில், நடுரோட்டில் மக்களை அச்சுறுத்தும் வகையில் கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய வாலிபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது  கத்தியால் கேக் வெட்டியவர்கள் கோவை செல்வபுரம் தெலுங்குபாளையம் பிரிவை சேர்ந்த அசோக்குமார், அரவிந்த்குமார் மற்றும் வடவள்ளி பி.என். புதூரை சேர்ந்த தினேஷ்குமார்,  காந்திபார்க் பகுதியை சேர்ந்த பார்த்திபன் ஆகியோர் என்பது தெரியவந்தது.

Also see... திருச்சியில் மணல் லாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்திய மக்கள் ...

இவர்கள் அசோக் குமாரின் பிறந்த நாளை சாலையில் வைத்து சிறிய சைஸ் பட்டாக்கத்தியால் கேக்வெட்டி கொண்டாடி இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்த்து. இதனையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்த அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களில் அரவிந்தகுமார் தவிர மற்ற 3 பேர் மீதும் கோவையில் உள்ள பல்வேறு  காவல் நிலையங்களில் அடிதடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Atlee birthday, Cake, Coimbatore, Crime News, Rowdy baby