Home /News /coimbatore /

26வயது இளம்பெண்ணை ஏமாற்றி 2-வது திருமணம் செய்ய முயற்சி - சாஃப்ட்வேர் இன்ஜினியர் சிக்கியது எப்படி?

26வயது இளம்பெண்ணை ஏமாற்றி 2-வது திருமணம் செய்ய முயற்சி - சாஃப்ட்வேர் இன்ஜினியர் சிக்கியது எப்படி?

ராமு

ராமு

குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்து வரும் ராமு, திருமண தகவல் மையத்தில் இருந்து 26 வயதான இளம் பெண்ணின் கைபேசி எண்ணை எடுத்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
    கோவையில் சுங்க இலாக்கா அதிகாரி என எமாற்றி  இரண்டாம் திருமணம் செய்ய முயன்ற 38 வயது சாஃப்ட்வேர் இன்ஜினியர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

    கோவை வீரபாண்டி பகுதியை சேர்ந்த ராமு(38) என்பவர், தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்து வரும் ராமு, திருமண தகவல் மையத்தில் இருந்து 26 வயதான இளம் பெண்ணின் கைபேசி எண்ணை எடுத்துள்ளார்.

    அந்த பெண்ணிற்கு தொடர்பு கொண்டு தான் சுங்க இலாகாவில் அதிகாரியாக பணியாற்றி வருவதாகவும் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் அதற்கு சம்மதமா என்றும் கேட்டு உள்ளார். அதற்கு பதிலளித்த அந்த இளம்பெண், திருமணமான ஒருசில மாதங்களிலேயே தன் கணவர் பிரிந்துவிட்டார் எனவும் ராமுவை திருமணம் செய்துகொள்ள சம்மதம் எனவும் தெரிவித்துள்ளார்.

    இதனையடுத்து இருவரும் செல்போனில் அடிக்கடி பேசிக்கொண்டனர். அத்துடன் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர். இதை தொடர்ந்து ராமு, அந்த இளம்பெண்ணிடம் திருமணத்துக்கு துணிகள் வாங்க செல்லலாம் என்று கூறி உள்ளார். அவர்கள் இருவரும் ஜவுளி கடைக்கு சென்று ரூ.50 ஆயிரத்துக்கு திருமண ஆடைகள் வாங்கி உள்ளனர்.

    இதையும் வாசிக்க: சிறுமி டான்யா டிஸ்சார்ஜ்.. படிப்பு செலவை அரசே ஏற்பதாக அமைச்சர் நாசர் உறுதி!

    இந்நிலையில் திடீரென்று அந்த இளம்பெண்ணுக்கு ராமு மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ரகசியமாக விசாரணை செய்ததில், ராமு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து வாழ்வது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த இளம்பெண் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் ராமு, சுங்க இலாகா அதிகாரி இல்லை என்பதும், அவர் சாப்ட்வேர் என்ஜினீயர் என்பதும், மனைவியை பிரிந்து வாழ்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து காவல்துறையினர் ராமுவை கைது செய்து சுங்க இலாகா ஆடை உள்ளிட்ட போலி ஆதாரங்களை பறிமுதல் செய்தனர்.

    செய்தியாளர்: ஆரோக்கிய ஜெரால்டு  ( கோவை)
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Cheating, Crime News, Marriage

    அடுத்த செய்தி