முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / கோவையில் அழகு நிலைய ஊழியர் 12 துண்டுகளாக வெட்டிக் கொலை.. பெண் நண்பர் உட்பட 3 பேர் சிறையில் அடைப்பு

கோவையில் அழகு நிலைய ஊழியர் 12 துண்டுகளாக வெட்டிக் கொலை.. பெண் நண்பர் உட்பட 3 பேர் சிறையில் அடைப்பு

கொலை வழக்கில் 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

கொலை வழக்கில் 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

கோவையில் அழக நிலையத்தில் பணியாற்றி வந்தவர் 12 துண்டுகளாக வெட்டப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் இன்று கோவை நீதிமன்றத்தில் ஆஜராகினர்

  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பிரபு கோவை காந்திபுரத்தில் உள்ள அழகு நிலையத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் முன் விரோதம் காரணமாக அவரது பெண் நண்பர் கவிதா என்பவர் ஆண் நண்பர்களான அமுல் திவாகர், கார்த்திக் ஆகியோருடன் இணைந்து 12 துண்டுகளாக வெட்டி அவரை கொலை செய்தனர். வெட்டப்பட்ட உறுப்புகளை மூன்று பேரும் பல்வேறு பகுதிகளில் வீசினர்.

இந்த நிலையில் துடியலூர் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் பிரபுவின் கை கண்டறியப்பட்டது. இதையடுத்துப் போலீசார் வெட்டப்பட்ட கையில் இருக்கும் கைரேகையை வைத்து விசாரணை மேற்கொண்டனர். துடியலூர் பகுதியில் வெரும் இடது கை மட்டுமே கண்டறியப்பட்ட இந்த வழக்கில், குற்றவாளிகள் 3 பேரையும் 6 நாட்களுக்குள் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Also see... புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது..?

இந்நிலையில் கைது செய்யப்பட்ட கவிதா, அமுல் திவாகர், கார்த்திக் ஆகிய மூன்று பேரையும் துடியலூர் போலீசார் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் - 1 இல் ஆஜர்படுத்தினர். இவர்களை விசாரித்த நீதிபதி கோபாலகிருஷ்ணன் மூன்று பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்: ஜெரால்ட், கோவை

First published:

Tags: Coimbatore, Crime News, Murder case