ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

பாஜக, இந்து அமைப்பினர் வாகனங்களை சேதப்படுத்திய வழக்கில் 3 பேர் கைது..!

பாஜக, இந்து அமைப்பினர் வாகனங்களை சேதப்படுத்திய வழக்கில் 3 பேர் கைது..!

பிஜேபி மற்றும் இந்து அமைப்பினர் வாகனங்களை சேதப்படுத்திய வழக்கில் 3 பேர் கைது

பிஜேபி மற்றும் இந்து அமைப்பினர் வாகனங்களை சேதப்படுத்திய வழக்கில் 3 பேர் கைது

Pollachi | பொள்ளாச்சியில் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் வாகனங்களை சேதப்படுத்திய வழக்கில் 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்த நிலையில் வரும் 30ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pollachi, India

பொள்ளாச்சி அருகே உள்ள குமரன் நகர் பகுதியில் கடந்த 22 ஆம் தேதி பாஜக மற்றும் இந்து அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகளின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார் மற்றும் இரண்டு ஆட்டோ ஆகிய வாகனங்களை மர்ம நபர்கள் சேதப்படுத்தியும்  வாகனங்களின் மீது டீசலை ஊற்றியும் தீ வைக்க முயற்சி செய்தனர்.

இது தொடர்பாக பொள்ளாச்சி மேற்கு காவல்நிலையத்தில் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இவ்வழக்கில் தொடர்புடையவர்களை தேடும் பணியில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் உத்தரவின் பேரில், 7 தனிப்படைகள் அமைத்து தீவிர வாகன சோதனை நடத்தினர்.

இதை தொடர்ந்து சம்பவம் நடந்த இடங்களில் உள்ள சுமார் 250-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தும் 500 க்கும் மேற்பட்ட நபர்களின் தொலைபேசி எண்களை ஆய்வு செய்தும் சந்தேக நபர்களை தொடந்து கண்காணித்து வந்தனர். அதில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த முகம்மது ரபீக், ரமீஸ் ராஜா மற்றும் மாலிக்(எ)சாதிக் பாஷா ஆகிய மூவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து  பொள்ளாச்சி நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Also see...கெட்டுபோன கேக்கை விற்பனை செய்த பேக்கரிக்கு சீல்!

அப்போது குற்றம் சட்டப்படவர்களை விசாரித்த நீதிபதி மூன்று பேரையும் வரும் 30.09.22 தேதி வரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார். இதையடுத்து கைது செய்யப்பட்ட மூவரையும் போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர்: ம‌.சக்திவேல், பொள்ளாச்சி

Published by:Vaijayanthi S
First published:

Tags: BJP, Coimbatore, Hindu organisation