Home /News /coimbatore /

கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது...

கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது...

கஞ்சா விற்பனையில் கைதான 3 பேர்

கஞ்சா விற்பனையில் கைதான 3 பேர்

Kanja Arrest | கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 12 கிலோ கஞ்சா மற்றும்  25,000 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே ராமாட்சியம்பாளையம்  ரயில்வே கேட் பகுதியில் காவல் துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது  சந்தேகத்திற்கிடமான வகையில் அங்கு நின்று கொண்டு இருந்த 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசவே அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சூலூர் முதலிபாளையம் பகுதியைச் சேர்ந்த முருகன், சென்னையை சேர்ந்த  சபி முகமது, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிபின் பிரிக் என்பது தெரியவந்தது. இதனையடுத்து மூவரும் கோவை புறநகர் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 12 கிலோ கஞ்சா மற்றும் 25,000 ரூபாய் பணம் ஆகியவற்றை கருமத்தம்பட்டி போலீசார் பறிமுதல் செய்தனர்.

Also see... மாவட்ட ஆட்சியர் பெயரை பயன்படுத்தி மோசடி.. ரூ.6 லட்சம் ஏமாற்றிய போலி ஐபிஎஸ் அதிகாரிக்கு வலை

ஆந்திரா பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து கருமத்தம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மூவரும் தனித்தனியாக விற்பனை செய்தும் விசாரணையில் தெரியவந்தது . இதில் முருகன் மீது ஏராளமான கஞ்சா வழக்குகள் பதிவாகி பலமுறை சிறைக்கு வந்திருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Arrested, Cannabis

அடுத்த செய்தி