ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.61 லட்சம் மோசடி - கோவையில் 3 பேர் கைது...

ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.61 லட்சம் மோசடி - கோவையில் 3 பேர் கைது...

கைதான 3 பேர்

கைதான 3 பேர்

Coimbatore | கோவையில் ரியல் எஸ்டேட் அதிபரிடம்  61 லட்ச ரூபாய் பண மோசடி செய்த 3 பேரை கோவை மாநகர குற்றபிரிவு போலீசார்  கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை கே.கே.புதூரைச் சேர்ந்த வெங்கடேசன் அவிநாசி சாலையில் ஷ்ரேனா ப்ராபர்டீஸ் (SHRENA PROPERTIES) என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நடத்தி வருகிறார். இவருக்கு அறிமுகமான ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் குணசேகரன், வேலுமணி ஆகியோர் மூலம் சுரேஷ் என்பவர் வெங்கடேசனுக்கு அறிமுகமனார். கோவை பாப்பம்பட்டியில்  தனது குடும்ப சொத்து 35 ஏக்கர்  நிலம்  இருப்பதாகவும் ,  JOINT VENTURE ஒப்பந்தம் போட்டு வீடு கட்டி விற்கலாம் எனவும், லாபத்தில் சரிபாதியாக வைத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பிய வெங்கடேசன் சுரேஷின் அக்கவுண்டிற்கு  ரூ.64 லட்சம்  ரூபாய் அனுப்பியுள்ளார். பின்னர் சுரேஷ் கொடுத்த ஆவணங்களை ஆய்வு செய்த போது அவை போலியானது என்பது தெரியவந்தது. இந்நிலையில் இதுகுறித்து வெங்கடேசன் , சுரேசிடம் கேட்ட போது  பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாக தெரிவித்துள்ளார். முதலில் 3 லட்ச ரூபாயை திருப்பி கொடுத்த சுரேஷ் மீதி 61 லட்ச ரூபாய் பணத்திற்கு செக்  கொடுத்துள்ளார்.

Also see... இளம்பெண்ணின் நிர்வாண படங்கள் வீடியோக்களை வெளியிட்டு மிரட்டல் - கோவையில் சிக்கிய இளைஞர்

அதை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்பியது. இதனையடுத்து மீண்டும் பணத்தை கேட்ட போது சுரேஷ் மற்றும் அவருடன் இருந்த குணசேகரன், வேலுமணி ஆகியோர்  வெங்கடேசனை மிரட்டியுள்ளனர். இதனையடுத்து வெங்கடேசன் அளித்த புகாரில் சுரேஷ் , குணசேகரன், வேலுமணி ஆகிய மூவரையும் கோவை மாநகர குற்றபிரிவு போலீசார் கைது செய்தனர்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Cheating case, Coimbatore, Crime News