ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு.. தீவிரமடையும் விசாரணை - மேலும் 3 பேர் கைது

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு.. தீவிரமடையும் விசாரணை - மேலும் 3 பேர் கைது

கோவை கார் குண்டு வெடிப்பு

கோவை கார் குண்டு வெடிப்பு

ஏற்கனவே கைது செய்யப்பட்ட 6 பேர் கொடுத்த தகவலின் அடிப்படையில், மேலும் 3 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை கார் வெடிப்பு வழக்கில் மேலும் 3 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

கோவை உக்கடம் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 23ம் தேதி நிகழ்ந்த கார் வெடிப்பில், ஜமீஷா முபீன் என்பவர் உயிரிழந்தார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க தமிழக அரசு பரிந்துரைத்ததையடுத்து, மத்திய அரசு NIA விசாரிக்க உத்தரவிட்டது.’

இதையும் படிக்க :  தமிழகத்தில் ஒரு அந்நிய சக்தி... அமைச்சர் பிடிஆர் விமர்சனத்திற்கு அண்ணாமலை பதிலடி

இந்த வழக்கை என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், 6 பேர் கைது செய்யப்பட்டு, இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், மேலும் 3 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குன்னூரை சேர்ந்த உமர் பாரூக், கோவையை சேர்ந்த தவ்பிக் மற்றும் பெரோஸ்கான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே உமர் மற்றும் பெரோஸ்கான் ஆகியோரிடம் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியிருந்தனர்.

உமர் வீட்டில் கடந்த மாதம் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், என்ஐஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில், குன்னூரில் உமர் இல்லத்தில், சதி செயல்கள் தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஜமீஷா முபின், ஃபெரோஸ்கான் ஆகியோர் பங்கேற்றது தெரியவந்துள்ளது.

First published:

Tags: Bomb blast, Coimbatore, Kovai bomb blast, NIA