ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

பொள்ளாச்சியில் சிக்கிய ரூ.5 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் - போலீஸார் தீவிர விசாரணை

பொள்ளாச்சியில் சிக்கிய ரூ.5 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் - போலீஸார் தீவிர விசாரணை

தடை செய்யப்பட்ட போதை பொருளை விற்ற 2 பேர் கைது

தடை செய்யப்பட்ட போதை பொருளை விற்ற 2 பேர் கைது

பொள்ளாச்சியில் போதை பொருட்களை விற்பனை செய்த 2 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Pollachi, India

  பொள்ளாச்சி அடுத்துள்ள உள்ள கிணத்துக்கடவு கொண்டம்பட்டி செல்லும் வழியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சில மர்ம நபர்கள் போதைப் பொருட்களை விற்பனை செய்வதாக கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்களுக்கும் போதைபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது.

  இந்த தகவலை அடுத்து கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் மாற்று உடையில்  கிணத்துக்கடவு ரயில்வே மேம்பாலத்திலன் கீழ்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 2 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே 2 பேரையும் பிடித்த போலீசார் அவர்கள் கையில் வைத்திருந்த பையை திறந்து பார்த்தபோது சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.

  இதனை அடுத்து போலீசார் இருவரையும் கிணத்துக்கடவு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர சோதனை செய்ததில் அவர்கள் பையில் வைத்திருந்தது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் தடை செய்யப்பட்ட போதைப்பொருள், போதை மாத்திரை மற்றும் போதை ஸ்டாம்புகள் என்பது தெரியவந்தது.

  இதனை அடுத்து போலீசார் அந்த இரண்டு பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் அந்த நபர் தேனி மாவட்டம் உத்தமபாளையம் , நாராயண தேவன் பட்டியைச் சேர்ந்த ராம்குமார் வயது (32) என்பதும் மற்றொருவர் அதே பகுதியைச் சேர்ந்த கிஷோர் அகமது (33) என்பதும் தெரியவந்தது.

  பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள்

  இதனையடுத்து கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசார் கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து 100 கிராம் போதை பவுடர், 17 போதை மாத்திரைகள், மற்றும் 19 போதை ஸ்டாம்புகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை வஸ்து மாத்திரைகளின் மதிப்பு சுமார் 5 லட்சம் இருக்கும் என்று கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசார் தெரிவித்துள்ளனர்.

  Also see... அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் ஐ.டி சோதனை 1.8 கோடி பறிமுதல்

  மேலும் கைது செய்யப்பட்ட ராம்குமார் மற்றும் கிஷோர் அகமத் சிறையில் அடைக்கப்பட்டனர். பொள்ளாச்சி பகுதியில் தடை செய்யப்பட்ட உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் போதை பொருள் வஸ்துகளை விற்பனை செய்யும் தகவலை அறிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

  செய்தியாளர்: ம.சக்திவேல்..பொள்ளாச்சி

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Arrested, Drug addiction, Pollachi, Seized