ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

கோவை விமானநிலையத்தில் சிக்கிய 5.7 கிலோ கடத்தல் தங்கம் - அதிகாரிகள் தீவிர விசாரணை

கோவை விமானநிலையத்தில் சிக்கிய 5.7 கிலோ கடத்தல் தங்கம் - அதிகாரிகள் தீவிர விசாரணை

தங்கம் கடத்தல் பறிமுதல்

தங்கம் கடத்தல் பறிமுதல்

Coimbatore | சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமான மூலம் தங்கம் கடத்தி வந்த 5.7 கிலோ தங்க நகைகளை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Coimbatore, India

  கோவை விமான நிலையத்திற்கு கிடைத்த திடீர் தகவல்களின் பேரில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டு கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்வது வழக்கமாகி வருகிறது. இப்படி நேற்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு வந்த 6 பயணிகளை கோவை வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் சோதனை செய்தனர்.

  அப்போது தங்க செயின்கள் மற்றும் வளையல்களை பேண்ட் பாக்கெட்டுகளில் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அவர்களிடமிருந்து தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.இந்த வழக்கில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு சென்னையை சேர்ந்த முகமது அப்சல்(32) என்ற பயணி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கின்கீழ் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

  Also see... கழிவு நீர் தொட்டியில் 3 நாட்களாக தவித்த கன்றுக்குட்டி மீட்பு...

  இதே போன்று, திருச்சியைச் சேர்ந்த மற்றொரு பயணி கிருஷ்ணன் (வயது 66) என்பவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு 50 லட்சத்துக்கும் அதிகமாகவும் ஒரு கோடிக்கும் குறைவாகவும் இருப்பதனால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். எஞ்சிய நான்கு பயணிகளும் அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டனர். மேலும் இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக யார் யாருக்கு தொடர்பு உள்ளது உள்ளிட்ட கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  செய்தியாளர்: ஜெரால்ட் , கோவை

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Arrested, Coimbatore, Crime News, Gold, Smuggling