ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ள 19 காட்டுயானைகள்.. பீதியில் பொதுமக்கள் - வனத்துறை எச்சரிக்கை

தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ள 19 காட்டுயானைகள்.. பீதியில் பொதுமக்கள் - வனத்துறை எச்சரிக்கை

காட்டுயானைகள் முகாம்

காட்டுயானைகள் முகாம்

ஒரே இடத்தில் 19 யானைகள் முகாமிட்டுள்ளதால் வனத்துறையினரும் அச்சமடைந்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Pollachi | Tamil Nadu

  பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை அக்காமலை எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் குட்டிகளுடன் 15க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

  ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக வனவிலங்குகள் கரடி, சிறுத்தை, யானை கூட்டங்கள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 10 நாட்களில் காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்புக்குள் புகுந்து வீடுகளையும் ரேஷன் கடைகளையும் இடித்து சேதப்படுத்தி வந்தது.

  இந்த நிலையில் மீண்டும் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் பகுதியில் குட்டிகளுடன் 19 காட்டு யானைகள் தேயிலை தோட்டத்திற்குள் முகாமிட்டு சுற்றி வந்தன. யானைக் கூட்டங்கள் வருவதை கண்டு அச்சமடைந்த ஊழியர்கள் அலறி அடித்து ஓடி பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர்.

  மேலும் யானைக் கூட்டங்கள் குட்டிகளுடன் அதே பகுதியில் முகாமிட்டுள்ளதால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

  இதையும் படிங்க | 800 கடைகள் கொண்ட கோவையின் ஷாப்பிங் சொர்க்கம் ‘உப்புக்கிணறு சந்து’.. இங்கு மலிவு விலையில் இத்தனை பொருட்கள் வாங்கலாமா..!

  தொழிலாளர்கள் அளித்த தகவலின் படி, வால்பாறை வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையில் வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்து வந்து யானைகளை மணப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் ஒரே இடத்தில் குட்டிகளுடன் 19 யானைகள் இருந்ததால் வனத்துறையினரும் யானைகளை விரட்டுவதில் அச்சம் கொண்டனர்.

  மேலும் யானைகள் வனப் பகுதிக்குள் செல்லாமல் அப்பகுதியிலேயே முகாமிட்டு சுற்றி வருவதால் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணி செய்ய வேண்டும் எனவும் தனித்தனியாக பணி செய்ய வேண்டாம் எனவும் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேறும் பொழுது பாதுகாப்பாக செல்ல வேண்டும் எனவும் வனத்துறையினர் அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

  செய்தியாளர்: ம.சக்திவேல்..பொள்ளாச்சி.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Elephant, Elephant and calf, Pollachi