Home /News /coimbatore /

ஆபரேஷன் கந்துவட்டி.. கோவையில் சிக்கிய ரூ.1.25 கோடி - 18 பேர் கைது

ஆபரேஷன் கந்துவட்டி.. கோவையில் சிக்கிய ரூ.1.25 கோடி - 18 பேர் கைது

கந்துவட்டி வசூல் செய்த நபர் கைது

கந்துவட்டி வசூல் செய்த நபர் கைது

kandhu vatti : கோவையில் பாஸ்போர்ட், ஆதார் கார்டு போன்றவை வைத்து கந்துவட்டிக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் நேற்று  போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கந்துவட்டி வசூல் செய்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 1.25 கோடி பணம், சொத்து ஆவணங்கள், ஏடிஎம், பாஸ்போட்  உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கந்துவட்டி தொடர்பாக நேற்று 16 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், ஆனைமலை,மதுக்கரை உட்பட மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் நடத்தப்பட்ட  இந்த சோதனையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தபட்டனர்.

இதில் கோவையை அடுத்த திருமலையாம் பாளையம் பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்ற பைனான்ஸ் அதிபர் வீட்டில் இருந்து 1. 12 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கந்துவட்டி கொடுப்பதற்காக வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மொத்தம் 1.25 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக திருமலையாம்பாளையம் நடராஜன் உட்பட 18 பேரை கைது செய்தனர். மேலும் கந்துவட்டி கொடுப்பவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புடைய 379 சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படடது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், 79 புரோ நோட்டுகள், 127 காசோலைகள், 48 ஏடிஎம் கார்டுகள், 18 வங்கி பாஸ்புத்தகங்கள், 54 கையெழுத்திடப்பட்ட வெற்று காகிதங்கள், 211 ஆர்.சி.புத்தகங்கள், 7 ஆதார் கார்டுகள், 3 பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Must Read : ஆண்மையற்றவர் என்பதை மறைத்து வரதட்சணையுடன் திருமணம் செய்த நபர் - 420 பிரிவிலும் வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

வழக்கமாக சொத்து பத்திரங்கள், வாகனங்களின் ஆர்.சி புத்தகம் போன்றவற்றை வைத்து கந்து வட்டிக்கு பணம் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பாஸ்போர்ட், ஆதார் கார்டு போன்றவை வைத்து கந்துவட்டிக்கு பணம் கொடுக்கப்பட்டிருப்பது போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Suresh V
First published:

Tags: Arrested, Coimbatore, Crime News, Kandhu Vatti

அடுத்த செய்தி