ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

தென்னை தோப்பிற்குள் புகுந்த 12 அடி நீள பாம்பு.. வைரலாகும் வீடியோ

தென்னை தோப்பிற்குள் புகுந்த 12 அடி நீள பாம்பு.. வைரலாகும் வீடியோ

தென்னை தோப்பிற்குள் புகுந்த பாம்பு

தென்னை தோப்பிற்குள் புகுந்த பாம்பு

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த தனியார் தன்னார்வ அமைப்பினர் மலைப்பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

விவசாய தோட்டத்திற்குள் புகுந்த 12 அடி மலைப்பாம்பை தனியார் தன்னார்வல அமைப்பினர் மீட்டு வனத்துறை மூலம் காட்டில் விட்ட சம்பவம் கோவை அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை - பாலக்காடு நெடுஞ்சாலையில் உள்ள எட்டிமடை பகுதியை சேர்ந்தவர் சண்முகம். விவசாயியான இவரது வீட்டின் அருகே உள்ள தென்னை தோப்பிற்குள் சுமார் 12 அடி நீளமுள்ள மலைபாம்பு புகுந்துள்ளது. இதைக் கண்ட தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையும் படிக்க : அந்த சிரிப்பு தான் ஹைலெட்.. வெட்கத்தால் இணையத்தை கொள்ளை கொண்ட வசந்தி - வைரல் வீடியோ

பின்னர் சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த தனியார் தன்னார்வ அமைப்பினர் மலைப்பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் அந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் மதுக்கரை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அந்த பாம்பு அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு விடப்பட்டது. இந்த நிலையில் தோட்டத்திற்குள் புகுந்த மலைப் பாம்பின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

செய்தியாளர் : ஜெரால்டு (கோயம்பத்தூர்)

First published:

Tags: Coimbatore, Local News, Snake, Viral Video