ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

குடியிருப்பு பகுதியில் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு... கோவையில் அலறியடித்து ஓடிய மக்கள்....

குடியிருப்பு பகுதியில் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு... கோவையில் அலறியடித்து ஓடிய மக்கள்....

குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு

குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு

Coimbatore News : காட்டு யானைகளும் அடிக்கடி ஊர் பகுதியில் வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இரவு நேரங்களில் வாகனம் ஓட்டுவதை தவிர்த்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

    கோவை குப்பேபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் புகுந்த 10 அடி மலை பாம்பால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் அலறியடித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    கோவை தொண்டாமுத்தூர் குப்பேபாளையம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் இரவு சுமார் 10 அடி நீளமுள்ள மலை பாம்பு புகுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் அங்கிருந்த அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

    அதன்படி அங்கு வந்த வனவர் கோபால் தலைமையிலான வனத்துறையினர் குடியிருப்பிற்குள் புகுந்த 10 அடி மலைப்பாம்பை பத்திரமாக மீட்டு அங்கிருந்து எடுத்துச் சென்றனர்.

    இதையும் படிங்க : அதிமுக எக்ஸ்பிரஸில் ஏறினால் டெல்லி செல்லலாம்.. செல்லூர் ராஜு

    பின்னர் அந்த பாம்பை பத்திரமாக அடர் வனப்பகுதிக்குள் விடுவித்தனர். தொடர்ந்து தொண்டாமுத்தூர் பகுதிகளில் மழை பெய்து வருவதால் வனப்பகுதி ஒட்டி உள்ள விவசாய நிலங்களுக்குள் அடிக்கடி கொடிய விஷம் கொண்ட பாம்பு மற்றும் மலை பாம்புகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    அதேபோல் காட்டு யானைகளும் அடிக்கடி ஊர் பகுதியில் வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இரவு நேரங்களில் வாகனம் ஓட்டுவதை தவிர்த்து வருகின்றனர்.

    கோவை செய்தியாளர் - சுரேஷ்

    Published by:Karthi K
    First published:

    Tags: Coimbatore, Python