எல்லையில் கைகலப்பு... அதிகரித்த பதற்றம்...! சீனாவின் இந்த முடிவு இந்தியாவுக்கான எச்சரிக்கையா?

இருநாட்டு எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் சீனாவின் இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

எல்லையில் கைகலப்பு... அதிகரித்த பதற்றம்...! சீனாவின் இந்த முடிவு இந்தியாவுக்கான எச்சரிக்கையா?
இருநாட்டு எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் சீனாவின் இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
  • Share this:
கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்தியாவில் உள்ள தங்கள் நாட்டு மக்களை அழைத்துச் செல்ல சீனா திட்டமிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு ஒருபுறம் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியா - சீனா இடையிலான எல்லை பதற்றமும் அதிகரித்து வருகிறது. லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி பகுதியில் கடந்த 5-ம் தேதி இருநாட்டு ராணுவத்தினர் இடையே மோதல் வெடித்தது. கைகலப்பு என்ற அளவிலேயே இந்த மோதல் இருந்தாலும், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலும் இத்தகைய மோதல் வெடித்தது.

பதற்றத்தை தணிக்க இருநாட்டு அதிகாரிகளும் நடத்திய பேச்சுவார்த்தைகளிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை.  கொரோனா விவகாரத்தில் சீனாவுக்கு எதிரான விசாரணை தேவை என்ற உலக நாடுகளின் கோரிக்கைக்கு இந்தியா ஆதரவளித்துள்ளது. மேலும் சீனாவில் இருந்து வெளியேறும் தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் நடவடிக்கைகளிலும் இந்தியா ஈடுபட்டு வருகிறது. இவற்றைத் தொடர்ந்து எல்லைப்பகுதியில் இந்தியாவுடன் மோதல் போக்கை சீனா தொடங்கியுள்ளதாக கருதப்படுகிறது.


இந்நிலையில் இந்தியாவில் உள்ள தங்கள் நாட்டினரை சிறப்பு விமானங்களில் அழைத்துச் செல்ல சீனா திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு ஒன்றை, டெல்லியில் உள்ள சீன தூதரகம் தனது இணையபக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் உள்ள சீனாவைச் சேர்ந்த மாணவர்கள், சுற்றுலாப்பயணிகள், தொழில்துறையினர் சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவ்வாறு சிறப்பு விமானங்களில் சீனா திரும்ப விரும்புவோர், வரும் 27-ம் தேதி முதல் பதிவு செய்யலாம் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் சிறப்பு விமானங்கள் எப்போது முதல் இயக்கப்பட உள்ளன என சீனா எந்த குறிப்பையும் வெளியிடவில்லை. கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள், தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் உடல் வெப்பம் 99 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமாக உள்ளோருக்கு விமானத்தில் அனுமதியில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று குறித்த விவரங்களை மறைத்து, விமானத்தில் பயணிப்போர் மீது குற்றநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சீனா எச்சரித்துள்ளது. இருநாடுகளுக்கான எல்லைப்பிரச்னை மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
First published: May 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading