ஹோம் /நியூஸ் /சென்னை /

சொமேட்டோ ஊழியரை தாக்கி பீட்சா, பர்கரை பறித்த ரவுடி... சிசிடிவி காட்சிகள் வைரல்...

சொமேட்டோ ஊழியரை தாக்கி பீட்சா, பர்கரை பறித்த ரவுடி... சிசிடிவி காட்சிகள் வைரல்...

சிசிடிவி காட்சி

சிசிடிவி காட்சி

zomato employee Attack | பேருந்து நிலையத்தில் சற்று ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த உணவு டெலிவரி ஊழியரை பட்டாக்கத்தியால் ரவுடி ஒருவர் கண்மூத்தனமாக தாக்கும் பகீர் காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  சென்னை சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார்(20), தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி நேரம் போக பகுதி நேரமாக இரவு நேரங்களில் சொமேட்டோவில் உணவு டெலிவரி செய்யும் பணியாற்றி வருகிறார்.

  இந்நிலையில், கடந்த மாதம் 25ஆம் தேதி சரவணகுமார் தியாகராய நகரில் இருந்து முல்லை நகர் பகுதிக்கு அவரது இருசக்கர வாகனத்தில் ஆர்டர் பெற்ற பீட்சா மற்றும் பர்கரை டெலிவரி செய்வதற்காக எடுத்துச் சென்றுள்ளார்.

  தொடர்ந்து மழை பெய்து வந்ததால் வியாசர்பாடி பகுதியில் பேருந்து நிறுத்ததில் வாகனத்தை நிறுத்தி சற்று ஓய்வெடுத்துள்ளார். அப்போது சரவணகுமார் பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒருநபர் பர்சை எடுக்க முயன்றுள்ளார். உடனே அவர் விழித்துக்கொள்ளவே திருட வந்த நபர் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியால் சரவணகுமாரை சராமாரியாக வெட்ட தொடங்கியுள்ளார்.

  இதையும் படிங்க : பச்சிளம் குழந்தையை கட்டைப் பையில் வைத்து ரயிலில் விட்டு சென்ற பெண்..! - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

  இதில் நிலை தடுமாறி கிழே விழுந்த சரவணகுமாரின் பாக்கெட்டில் இருந்த ரூ.1000 ரொக்கம், செல்போன் மற்றும் டெலிவரி செய்ய வைத்திருந்த பீட்சா, பர்கரையும் பறித்துச்சென்றுள்ளார்.

  ' isDesktop="true" id="830985" youtubeid="7m_y_7CNAmg" category="chennai">

  இந்த சம்பவம் தொடர்பாக சரவணகுமார் வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் செங்குன்றம் பகுதியை சேர்ந்த கரடி கரண் என்ற ரவுடியை பிடித்தனர்.

  விசாரணையில் கரடி கரண் வியாசர்பாடி காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், அவன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  Published by:Karthi K
  First published:

  Tags: Chennai, Crime News, Zomato