முகப்பு /செய்தி /சென்னை / சென்னையில் கத்தியுடன் கெத்து காட்டிய இளைஞர்கள்.. பைக்கில் இருந்து விழுந்து 2 பேருக்கு கை முறிந்தது..

சென்னையில் கத்தியுடன் கெத்து காட்டிய இளைஞர்கள்.. பைக்கில் இருந்து விழுந்து 2 பேருக்கு கை முறிந்தது..

கை முறிந்த இளைஞர்கள்

கை முறிந்த இளைஞர்கள்

Chennai News : சென்னை கொடுங்கையூரில் கத்திகளுடன் கெத்து காட்டிய 6 பேர் கைது. தப்பி ஓடும்போது கீழே விழுந்து 2 பேரின் கை உடைந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னை கொடுங்கையூர் மீனாம்பாள் சாலை சந்திப்பில் கொடுங்கையூர் போலீசார் நேற்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது 2 இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக 6 பேர் வந்தனர். போலீசார் அவர்களை பிடிக்க முற்பட்டபோது ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் சிக்கினர். மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் தப்பி ஓடினர். அவர்களது வண்டியில் இருந்து 2 கத்திகள் கீழே விழுந்தன.

இதனையடுத்து போலீசார் அவர்களை பின்தொடர்ந்து சென்றனர். அப்போது அவர்கள் ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனம் கீழே விழுந்தது. இதில் அந்த வாகனத்தில் சென்ற 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இதில் இருவருக்கு கை முறிந்தது. இதனையடுத்து அவர்களை போலீசார் விசாரணை செய்தபோது கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த கார்த்திக்(19), வெங்கடேஷ் (எ) தக்காளி(22), பிரவீன்குமார்( 21), செல்வகுமார்(19), கார்த்திகேயன்(24), வின்சென்ட்(25) என்பது தெரியவந்தது.

இந்த சம்பவத்தில் கீழே விழுந்ததில் வெங்கடேஷ் (எ) தக்காளி மற்றும் பிரவீன்குமார் ஆகிய இருவருக்கும் வலது கை உடைந்தது. இவர்கள் 6 பேரும் மதுபோதையில் 2 இருசக்கர வாகனங்களில் கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.  இதனையடுத்து 6 பேர் மீது வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர் : அசோக்குமார் - சென்னை

First published:

Tags: Chennai, Crime News, Local News