Home /News /chennai /

திருட வந்த இடத்தில் சபலம்.. பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து சிக்கிய பக்கத்து வீட்டு இளைஞர்..!

திருட வந்த இடத்தில் சபலம்.. பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து சிக்கிய பக்கத்து வீட்டு இளைஞர்..!

சம்பவத்தில் ஈடுபட்டு கைதான நபர்

சம்பவத்தில் ஈடுபட்டு கைதான நபர்

Chennai Tondiarpet : சென்னை தண்டையார்பேட்டையில் திருட வந்த இடத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    பணத்தை திருட வந்த இடத்தில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிற்க்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சென்னை தண்டையார்பேட்டை வ.உ.சி நகரில் வசித்து வரும் முல்லா என்பவர் தனது மனைவி குழந்தைகளோடு அதே பகுதியில் 10 வருடங்களாக வசித்து வருகிறார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் அவர்களது வீட்டின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் இளைஞர்  மகேஷ்குமார் என்பவர் பால்கனி வழியாக சுவர் ஏறி குதித்து முல்லாவின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அப்பொழுது டேபிள் மீது வைத்திருந்த பணத்தை திருடியுள்ளார்.

    பின்னர் குழந்தைகளோடு படுத்திருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்து அப்பெண் சுதாரித்துக் கொண்டு கூச்சலிடவே முல்லா எழுந்து பார்த்த பொழுது மகேஷ் குமார் அங்கிருந்து கீழே குதித்து தப்பி ஓடி உள்ளார்

    உடனடியாக அருகில் உள்ளவர்கள் புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் மகேஷ்குமாரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இரவு நேரத்தில் வீட்டில் திருட வந்து விட்டு, பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர்: அசோக் குமார்
    Published by:Arun
    First published:

    Tags: Chennai, Crime News

    அடுத்த செய்தி