ஹோம் /நியூஸ் /சென்னை /

குடிபோதையில் வயிறுமுட்ட சிக்கன் ரைஸ்.. தூக்கத்தில் உயிரிழந்த சென்னை இளைஞர்.. சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்!

குடிபோதையில் வயிறுமுட்ட சிக்கன் ரைஸ்.. தூக்கத்தில் உயிரிழந்த சென்னை இளைஞர்.. சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்!

மாதிரி படம்

மாதிரி படம்

நண்பரின் பிறந்தநாள் பார்ட்டியில் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு சிக்கன் ரைஸ் சாப்பிட்டு தூங்கியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai | Chennai [Madras] | Tamil Nadu

  சென்னையில் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு சிக்கன் ரைஸ் சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பி சி ஏ பட்டதாரி மகாவிஷ்ணு (21)  நேற்று இரவு அவரது நண்பர் ராம்குமார் என்பவரின் பிறந்த நாளை முன்னிட்டு ரெட்டேரி 200 அடி சாலையில் உள்ள ஹோட்டல் எஸ்.ஆர்.எம் கிராண்ட் மதுபான கூடத்தில் மது அருந்தியுள்ளார்.

  பின்னர் நண்பர்களுடன் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு விட்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு அங்கிருந்து நண்பர்களுடன் வீட்டிற்கு சென்று தூங்கியுள்ளார்.

  தூங்கி கிடந்த மகாவிஷ்ணு எந்த சத்தமும் எழுப்பாததால், அச்சமடைந்த உறவினர்கள் அவரை எழுப்பி பார்த்துள்ளனர். எந்த அசைவும் இன்றி கிடந்ததால் மகாவிஷ்ணுவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

  ALSO READ | “அம்மா தூங்குறாங்க” - மனைவியை கொலை செய்து குழந்தைகளிடம் நாடகமாடிய கணவன்!

  இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், கதறி அழுதுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Chennai, Chicken, Crime News, Death