ஹோம் /நியூஸ் /சென்னை /

பாட்டு போட்டுத்தான் குப்பை எடுப்பியா.. தூய்மை பணியாளர்களை தாக்கிய வாலிபர் கைது!

பாட்டு போட்டுத்தான் குப்பை எடுப்பியா.. தூய்மை பணியாளர்களை தாக்கிய வாலிபர் கைது!

தூய்மை பணியாளர்கள் மீது தாக்குதல்

தூய்மை பணியாளர்கள் மீது தாக்குதல்

சென்னையில் பணியின் போது தூய்மை பணியாளர்களை தாக்கிய வாலிபரை காவல்துறை கைது செய்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னை திருவொற்றியூர் கலைஞர் நகர் 1ஆவது தெருவில் தூய்மை பணியாளர்களான தேவி மற்றும் நவீன் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் வழக்கமான பணிக்கு சென்றுள்ளனர். தூய்மை பணிக்கான குப்பைகளை அள்ளிச்செல்லும் ஆட்டோவில் ஒலி பெருக்கி மூலம் பாடலை போட்டு வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரித்துள்ளனர்.

அப்போது அதே பகுதியில் உள்ள சரஸ்வதி நகரில் வசிக்கும் 32 வயதான பிரசன்னா என்ற வாலிபர் தூய்மை பணியாளர்கள் இருவரிடமும் மதுபோதையில் தகராறு செய்துள்ளார். பாட்டுப் போட்டுதான் குப்பைய எடுப்பீங்களா என பணியாளர்கள் நவீன் மற்றும் தேவியிடம் பிரசன்னா அதட்டி தகராறு செய்துள்ளார்.

இது மாநகராட்சி உருவாக்கிய விழிப்புணர்வு பாடல், அதை அதிகாரிகளின் உத்தரவின் பேரில் ஒலிபரப்பி வேலை செய்கிறோம் இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என இரு தூய்மை பணியாளர்களும் பதில் கூறியுள்ளனர். தூய்மை பணியாளர்களின் பதிலை கேட்டு பின்பும் பிரசன்னா ஆத்திரத்தில் இருவரையும் தாக்கி தகராறு செய்து அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இந்த சம்பவத்தை கேள்வி பட்ட சக தூய்மை பணியாளர்கள், ஒன்று திரண்டு தேவி மற்றும் நவீன் குமாருடன் சாத்தங்காடு காவல்நிலையத்தில் முற்றுகையிட்டு புகார் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையின் தாக்குதலில் ஈடுபட்ட பிரசன்னாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

First published:

Tags: Chennai Corporation worker, Crime News, Sanitary workers