முகப்பு /செய்தி /சென்னை / 100-க்கும் மேற்பட்ட வீடியோ... பாத்ரூமில் பெண்கள் குளிப்பதை ரகசியமாக படம் எடுத்த நபர்... சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

100-க்கும் மேற்பட்ட வீடியோ... பாத்ரூமில் பெண்கள் குளிப்பதை ரகசியமாக படம் எடுத்த நபர்... சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

கைதானவர்

கைதானவர்

Crime News : சென்னையில் குடியிருப்பின் பாத்ரூமில் செல்போனை மறைத்து வைத்து 100க்கும் மேற்பட்ட பெண்களை வீடியோ எடுத்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னை வடபழனியை சேர்ந்த தம்பதியரின் 12வது வகுப்பு படிக்கும் மகள் ஒருவர் அங்கிருக்கு பொது குளியல் அறையில் குளித்துக்கொண்டிருந்தாள். அப்போது ஜன்னல் வழியே செல்போன் மூலம் மர்ம நபர் ஒருவர் வீடியோ எடுப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.. பின்னரை் உடனடியாக தனது பெற்றோரிடத்தில் இதுகுறித்து கூறினார். அதன்பேரில் மாணவியின் பெற்றோர் செல்போனில் வீடியோ எடுத்த மர்ம நபரை கையும் களவுமாக பிடித்து வடபழனி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த வந்த போலீசார் மர்ம நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் பெயர் வினோத்குமார்(37) என்பதும், 10 குடும்பங்கள் கொண்ட குடியிருப்பு பகுதியில் மாணவி வீட்டுக்கு அருகாமை வீட்டில் அவர் வசித்து வந்ததும் தெரியவந்தது. மேலும் சென்னை மாநகராட்சி 11வது மண்டலத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.

இவர் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் 10க்கும் மேற்பட்ட வீடுகளும் அவற்றிற்கு பொது குளியலறையும் இருப்பதால் அங்கு குளிக்க வரும் சிறுமிகள் மற்றும் பெண்கள் என அனைவரையும் தனது செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்து வருவதை வாடிக்கையாக கொண்டு வந்துள்ளார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. சமீபத்தில் இவரது மனைவி இறந்ததால் தனிமையில் வசித்து வந்த வினோத்குமார் அருகாமை வீட்டில் வசிக்கும் பெண்கள் குளிக்கும்போது அவர்களுக்கே தெரியாமல் செல்போன் வைத்து வீடியோ பதிவு செய்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

மேலும் 100க்கும் மேற்பட்ட வீடியோக்கள் அவரது செல்போனில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்த சைபர் லேப்-க்கு அவரது செல்போனை அனுப்பினர். தொடர்ந்து போக்சோ பிரிவின் கீழ் வினோத்குமாரை கைது செய்த வடபழனி போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: Chennai, Crime News, Local News