Home /News /chennai /

க்யூஆர் கோடு’ ஸ்டிக்கரை ஒட்டி நூதன மோசடி செய்த இளைஞர் கைது...

க்யூஆர் கோடு’ ஸ்டிக்கரை ஒட்டி நூதன மோசடி செய்த இளைஞர் கைது...

கைதானவர் - வெங்கடேஷ்

கைதானவர் - வெங்கடேஷ்

crime Chennai | க்யூ.ஆர்.கோடு ஸ்டிக்கர் மூலம் சென்னை ஓஎம்ஆர் சாலையில் பணம் மோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து போலி காவல்துறை அடையாள அட்டையும் பறிமுதல் செய்யப்பட்டது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சென்னை துரைப்பாக்கம் அடுத்த ஒக்கியம் பேட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த்(32). இவர் தனது வீட்டின் முன்பு டிபன் கடை நடத்தி வருகிறார். அங்கு வரும் வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் பணம் செலுத்த பேடிஎம் க்யூ.ஆர்.கோடு ஸ்டிக்கரை கடையில் ஒட்டி வைத்துள்ளார்.  இந்நிலையில் தினந்தோறும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் காலை உணவு அருந்திய பின்பு ஆன்லைனில் செலுத்தும் பணம் கடந்த சில தினங்களாக தனது வங்கிக்கு பணம் பரிமாற்றம் ஆகவில்லை என்பது அவருக்கு தெரியவந்துள்ளது.

    இதனால் சந்தேகமடைந்த டிபன் கடை உரிமையாளர் ஆனந்த் இதில் ஏதோ மோசடி நடந்துள்ளது என்பதை உணர்ந்து கடையில் அவர் ஒட்டியுள்ள க்யூ.ஆர் கோடு ஸ்டிக்கருக்கு பதிலாக வேறொரு புதிய் க்யூ.ஆர்.கோடு ஸ்டிக்கர் ஒட்டி உள்ளதாகவும் அதனால் தனக்கு ரூபாய் 3000 நஷ்டம் ஏற்பட்டதாக கூறி கண்ணகிநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் ஐயப்பன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மோசடியில் ஈடுபட்டது கண்ணகி நகரைச் சேர்ந்த 21 வயதான வெங்கடேஷ் என்பதும் அவர் திருவான்மியூர் காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படையில் பணியாற்றியுள்ளதும் க்யூ.ஆர் கோடு ஸ்டிக்கரை ஒட்டி பண மோசடி செய்ததும் தெரிய வந்தது.

    மேலும் சென்னை மாநகர காவல் துறையில் காவலராக தான் பணியாற்றுவதாக போலி அடையாள அட்டை வைத்திருப்பதும் தெரியவந்தது. இதேபோல் அடையாறு காவல் நிலைய பகுதிகளில் உள்ள 7 கடைகளில் க்யூ.ஆர் கோடு ஸ்டிக்கர் ஒட்டி பணமோசடியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

    Also see...  சதுரங்க விளையாட்டின் ராஜா சிலுவை மகுடம் பெற்ற கதை தெரியுமா?

    பின்னர் போலீசார் வெங்கடேஷை கைது செய்து அவரிடம் இருந்து க்யூ.ஆர் கோடு ஸ்டிக்கர்களை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 

    செய்தியாளர்:  ப.வினோத்கண்ணன், இசிஆர்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Cheating case, Chennai, Crime News, Cyber crime

    அடுத்த செய்தி