ஹோம் /நியூஸ் /சென்னை /

ஆஞ்சநேயர் கோவிலில் ஆபாச படம் பார்த்து, அருவறுக்கத்தக்க செயலில் ஈடுபட்ட பட்டதாரி இளைஞர் கைது

ஆஞ்சநேயர் கோவிலில் ஆபாச படம் பார்த்து, அருவறுக்கத்தக்க செயலில் ஈடுபட்ட பட்டதாரி இளைஞர் கைது

கைது செய்யப்பட்ட அருண்

கைது செய்யப்பட்ட அருண்

இளைஞரை கைது செய்வதற்கு ராயப்பேட்டை உதவி ஆணையர் தனிப்படை போலீசார் 46 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆஞ்சநேயர் கோவிலில் ஆபாச படம் பார்த்து, ஆபாச செயலில் ஈடுபட்ட பட்டதாரி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணி மேயர் சிட்டிபாபு தெருவில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. கடந்த 20 ம் தேதி இரவு கோவிலுக்கு வந்த அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவர் கோவிலில் அமர்ந்து தனது செல்போனில் ஆபாச படம் பார்த்துள்ளார். மேலும், தனது ஆடைகளை கழட்டி  ஆபாச செயலில் ஈடுபட்டுள்ளார்.

இளைஞரின் இந்த செயலை கோவிலுள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் பார்த்து அதிர்ச்சியடைந்த கோவில் பூசாரி உடனே வெளியே ஓடி வந்து பார்ப்பதற்குள் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி சென்றார்.

இதனையடுத்து கோவில் பூசாரி பிரசாந்த் இந்த சம்பவம் குறித்து ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஜாம் பஜார் போலீசார் அந்த இளைஞர் மீது மத உணர்வை புண்படுத்துதல், ஆபாச செயலில் ஈடுபடுதல் உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

ஆன்லைன் சூதாட்டத்தை விட மறுத்த கணவன்.. கைக் குழந்தைகளை தவிக்கவிட்டு மனைவி தற்கொலை

மேலும் சிசிடிவி காட்சிப்பதிவுகளை வைத்து இளைஞரை போலீசார் தேடி வந்த நிலையில் ஆஞ்சநேயர் கோவிலில் ஆபாச படம் பார்த்து, ஆபாச செயலில் ஈடுப்பட்ட பாண்டிச்சேரியைச் சேர்ந்த இளைஞரை கைது செய்தனர்.

இவர் திருவல்லிகேணி பகுதியில் மேன்சனில் தங்கி உணவு டெலிவரி ஊழியராக ஸ்விக்கியில் பணியாற்றி வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

‘தொடர் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சில் பாஜகவினர் மீது சந்தேகம் உள்ளது’ – திருமாவளவன்

சென்னை லயோலா கல்லூரியில் விசுவல் கம்யூனிகேசன் படித்து விட்டு அரசு பணிக்கு தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருப்பதும் தெரியவந்தது.

போலீசாரின் தொடர் விசாரணையில் அருணுக்கும் அவரது மனைவிக்கும் சமீபத்தில் விவாகரத்து ஆகியுள்ளதும், அதனால் தனிமையில் வசித்து வந்த அருண் மதுபோதைக்கு அடிமையாகியுள்ளதும் தெரியவந்தது.

சம்பவத்தன்று மூன்று பீர்கள் வரை அருந்தி கோவிலுள்ள பகுதிக்கு உணவு டெலிவரிக்காக வந்ததும்,  பின் கோவிலுக்கு சென்ற இளைஞர் போதையில் என்ன நடந்தது என்று தெரியாமல் ஆபாச படத்தை செல்போனில் பார்த்துகொண்டே ஆபாச செயலில் ஈடுப்பட்டதும் தெரியவந்தது.

குறிப்பாக இளைஞரை கைது செய்வதற்கு ராயப்பேட்டை உதவி ஆணையர் தனிப்படை போலீசார் 46 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். இதில் 46-வது சிசிடிவி காட்சியில் ராயப்பேட்டையில் உள்ள தனியார் ஏ.டி.எம்-ல் இளைஞர் பணம் எடுக்கச் சென்றுள்ளார்.

வங்கியில் அந்த இளைஞர் விவரங்களை வாங்கி ராயப்பேட்டை உதவி ஆணையர் தனிப்படை போலீசார் பாண்டிச்சேரி சென்று அருணை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட அருணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் போலீசார் சிறையில் அடைத்தனர்.

Published by:Musthak
First published:

Tags: Crime News