ஹோம் /நியூஸ் /சென்னை /

யோகி பாபு படத்தின் விநியோகஸ்தர் தரப்பை கடத்திய தயாரிப்பாளர் தரப்பு! போலீசார் விசாரணை!

யோகி பாபு படத்தின் விநியோகஸ்தர் தரப்பை கடத்திய தயாரிப்பாளர் தரப்பு! போலீசார் விசாரணை!

யோகி பாபு

யோகி பாபு

கடந்த 3 நாட்ளாக பென்சர் வீடு திரும்பாததால் திரைப்படத்தின் விநியோகிஸ்தர் மதுராஜ் என்பவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

நடிகர் யோகி பாபு நடித்த ’ஷூ' திரைப்படத்தின் விநியோகஸ்தர் தரப்பினரை அடித்து கடத்திச் சென்ற தயாரிப்பாளர் தரப்பினரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

கடந்த அக்டோபர் மாதம் 14ஆம் தேதி நடிகர் யோகி பாபு நடித்த ‘ஷூ’ என்ற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் என்பவருக்கும் விநியோகிஸ்தர் மதுராஜ் என்பவருக்கும் இடையே பணத் தகராறு எழுந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 1-ம் தேதி மதியம் விருகம்பாக்கம் ஏவிஎம் அவென்யூ 2வது தெருவில் விநியோகிஸ்தர் தரப்பு அலுவலகத்தில் தயாரிப்பாளர் தரப்பினர் பத்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து கோபி, பென்சர் ஆகிய 2 நபர்களை அடித்து காயப்படுத்தியுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.70,000 பணம் மற்றும் செல்போன்களை பறித்துக் கொண்டு தாம்பரம் அருகே உள்ள விடுதியில் பென்சரையும் கோபியையும் கடத்தி வைத்துள்ளனர். அங்கு அவர்களை அடித்து துன்புறுத்தி அன்று மாலையை விடுவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 3 நாட்ளாக பென்சர் வீடு திரும்பாததால் திரைப்படத்தின் விநியோகிஸ்தர் மதுராஜ் என்பவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார்.

இந்த வழக்கில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களான நாகராஜ், வினோத்குமார் மற்றும் தயாரிப்பாளர் தரப்பை சேர்ந்த சொக்கலிங்கம், பிரசாந்த் ஆகிய 4 நபர்களை விருகம்பாக்கம் போலீசார், காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: Actor Yogibabu, Yogi babu