ஹோம் /நியூஸ் /சென்னை /

'கிடைத்த கேப்பில் விபரீதம்' ரயில் பெட்டிக்கு இடையே இளைஞர்கள் பயணம்.. ஷாக் சம்பவம்!

'கிடைத்த கேப்பில் விபரீதம்' ரயில் பெட்டிக்கு இடையே இளைஞர்கள் பயணம்.. ஷாக் சம்பவம்!

ஏலகிரி எக்ஸ்பிரஸ்

ஏலகிரி எக்ஸ்பிரஸ்

இதுபோன்று பயணிப்பவர்கள் மீது ரயில்வே போலீஸார் நடவடிக்கை எடுப்பதில்லை என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  சென்னைக்கு செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில், கூட்ட நெரிசல் காரணமாக, பெட்டிகளை இணைக்கும் பகுதியில் நின்றவாறு பயணிகள் நாள்தோறும் பயணம் செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  திருப்பத்தூர், வேலூர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து பணிநிமித்தமாக நாள்தோறும் ஏராளமானோர் சென்னைக்கு வந்துசெல்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் ரயில்கள் மூலம் பயணம் மேற்கொள்கின்றனர்.

  திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு தினமும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் அரக்கோணத்திற்கு காலை 7.50 மணிக்கு வந்து செல்கிறது.

  இது காலை 9 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு சென்றடைவதால், அரசு அலுவலகம் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், கட்டிட தொழிலாளர்கள் உள்ளிட்டோர் இதில் பயணம் மேற்கொள்கின்றனர். இதனால், ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் கழிவறையிலும் அமர்ந்து பயணிக்கும் நிலை உள்ளது. அதிலும், கடந்த சில நாட்களாக கூட்ட நெரிசலால் ரயில் பெட்டிகளை இணைக்கும் கப்ளிங் மீது நின்றவாறும் சிலர் பயணிக்கின்றனர்.

  9 குழந்தைகளுடன் சைக்கிளில் பயணித்த நபர் - வைரலாகும் வீடியோ.! 

  இதுபோன்று பயணிப்பவர்கள் மீது ரயில்வே போலீஸார் நடவடிக்கை எடுப்பதில்லை என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, நெஞ்சை பதறவைக்கும் வகையில் பயணிக்கும் பயணிகளை எச்சரித்து பெட்டிகளில் பயணிக்கச் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கூடுதல் பெட்டிகளை இணைக்கலாம் அல்லது சிறப்பு ரயில்களை இயக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Chennai, Train, Yelagiri